செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் பலருக்கும் ஆர்வம் உண்டு.  நாய், பூனை, கிளி மட்டுமல்ல, யானை போன்ற விலங்குகளையும் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக மாற்றிக் கொள்ளும் மனிதர்களை நாம் பார்த்திருக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது காலம் மாறிவிட்டது.  முதலில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது இயல்பான ஒன்றாக இருந்தது.  அதற்கு பெரிய அளவில் செலவாகாது.  ஆனால் இந்த விருப்பம் தற்போது மிகவும் விலை உயர்ந்ததாகிவிட்டது.


சிலருக்கு கிளிகள் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு, ஆனால் இப்போது இந்த பொழுதுபோக்குகள் மிகவும் விலை உயர்ந்ததாகிவிட்டது.  கான்பூர் வனச்சரகம் லங்கூர் மற்றும் கிளி வளர்ப்பை தடை செய்துள்ளது. இந்தத் தடையை மீறி லங்கூர் மற்றும் கிளியை வளர்ப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.


Also Read | கோயம்புத்தூரில் வீட்டிற்குள் 35 குட்டிகளை போட்ட கண்ணாடிவிரியன் பாம்பு


லங்கூர் மற்றும் கிளியை பிடித்து கூண்டில் அடைப்பது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகும். எனவே, இந்த பிராணிகளை பிடிப்பவர்களும், வளர்ப்பவர்களும் 3 ஆண்டுகள் சிறைதண்டனையோ அல்லது 25 ஆயிரம் ரூபாய் அபராதமோ செலுத்த வேண்டும். சில சமயங்களில், சிறை மற்றும் அபராதம் இரண்டுமே விதிக்கப்படும் என்று கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கான்பூரின் சமூக வனவியல் பிரிவு அரவிந்த்குமார் யாதவ் பிரதேச இயக்குநர் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளார். உத்தரவின்படி, எந்தவொரு நபரோ அல்லது அமைப்போ லாங்கூர் அல்லது கிளியை சிறைபிடித்து வைத்திருந்தால், அவர்கள் மீது 1972ஆம் ஆண்டில் வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கபப்டும். 


Also Read | டெல்லியில் கோரதண்டவமாடும் பாலைவன வெட்டுக்கிளிகள்


குற்றச்சாடு நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்படும் அல்லது 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் வசூலிக்கப்படலாம். சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், குற்றவாளிக்கு சிறை மற்றும் அபராதம் இரண்டுமே விதிக்க முடியும். 


கிளிகளில் 86 இனங்களைச் சார்ந்த 372 வகைகள் உள்ளன. கிளிகளின் சிறப்ம்சம் அவற்றின் வளைந்த அலகு ஆகும்.  அதை நாம் கிளிமூக்கு என்று அழைக்கிறோம். கொண்டன. ஆஸ்திரேலியாவிலும், தென் அமெரிக்காவிலுமே மிகவும் அதிக வகையிலான கிளிகள் உள்ளன. தமிழ்நாட்டில் பொதுவாக காணப்படுவது சிவப்பு மூக்குக் கொண்ட கிளியாகும்.


பத்து கிராம் முதல் 4 கிலோ வரையிலான எடையில் கிளிகள் காணப்படுகின்றன. அவற்றின் அளவு 8 செ.மீட்டர் முதல் ஒரு மீட்டர் வரையில் இருக்கும்.  பொதுவாக கிளிகள் மரப்பொந்துகளில் வாழ்பவை. மனிதர்களைப் போலவே ஒலி எழுப்பக்கூடியவை.  பயிற்சிக் கொடுத்தால், மனிதர்களைப் போலவே சில வார்த்தைகளை உச்சரிக்கும் திறன் கொண்டவை.    சொல்வதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என்று ஒரு செலவாடை உண்டு . ஆண் ஆப்பிரிக்க சாம்பல் கிளிகள் மனிதர்களின் பேச்சைப் புரிந்துகொள்வதில் சிறப்பு வாய்ந்தவை.


Also Read | கர்த்தார்பூர் வழித்தடத்தை இரண்டு நாள் நோட்டீசில் திறக்கும் பாகிஸ்தானின் நோக்கம் என்ன?


குரங்கு இனத்தில் முக்கியமான ஒன்று லங்கூர் குரங்கு. வெள்ளை(காமன் லங்கூர்) மற்றும் கருப்பு (நீலகிரி லங்கூர்) என இரண்டு வகை லங்கூர்கள் உள்ளன.  இந்தியாவில் 7 வகையான லங்கூர் இனங்கள் வாழ்கின்றன.  இவற்றின் முகத்தோற்றம் மனிதர்களை ஒத்துக் காணப்படும். லங்கூர்ள் சுமார் 20 ஆண்டுகள் வாழக்கூடியவை.  ஒரு மரத்தில் இருந்து மற்றொரு மரத்திற்கு 12 முதல் 16 அடி வரை தாவும் திறன் கொண்டவை. அதோடு, மரத்தின் உச்சியிலிருந்து 30 முதல் 40 அடி வரை கீழ் நோக்கி தாண்டும் திறனும் கொண்டவை.