லண்டன்: பிரிட்டிஷ் உளவாளி ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடித்ததால் தனக்கு சினிமாவில் ஒரு அற்புதமான வாழ்க்கை அமைந்தது என்று ஹாலிவுட் நட்சத்திரம் பியர்ஸ் ப்ரோஸ்னன் (Pierce Brosnan) கூறுகிறார்.  ஆனால்,  ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்கவில்லை என்பதால் வருத்தப்படவில்லை என்று சொல்லி ரசிகர்களுக்கு திகைப்பை ஏற்படுத்தியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

67 வயதான நடிகர் பியர்ஸ் ப்ரோஸ்னன், ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசையில் நான்கு படங்களில் ஏஜென்ட் 007 ஆக நடித்தார், கடைசியாக 2002 இல் வெளியான "டை அனதர் டே" (Die Another Day) திரைப்படத்தில் ஏஜென்ட் 007 ஆக நடிக்க விரும்பினார்.  ஆனால் திரைப்படத் தயாரிப்பாளர்கள் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகரை மாற்றும் யோசனையில் இருந்தனர்.  அவர்களின் தேர்வு டேனியல் கிரெய்க் (Daniel Craig) என்பதாக இருந்தது.  இதனால் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில்  பியர்ஸ் ப்ரோஸ்னன்  நடிக்க முடியவில்லை.


இந்த விஷயத்தைப் பற்றி இத்தனை ஆண்டுகள் பற்றி பேசிய ப்ரோஸ்னன், தொடர்ந்து ஜேம்ஸ் பாண்டாக நடிக்காதில் "எந்த வருத்தமும் இல்லை" (there's no regret) என்று தெரிவித்திருக்கிறார்.


Read Also | சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பணம் குறைந்துள்ளது


"நான் இதற்காக வருத்தப்பட விரும்பவில்லை. அப்படி வருத்தப்பட்டிருந்தால், அது எனது வாழ்க்கையில் வேறுபல துன்பத்திற்கும் அதிக வருத்தத்திற்கும் வழிவகுத்திருக்கும்.  ஆனால் ஜேம்ஸ் பாண்ட் என்பது எனக்கு வாழ்க்கையில் உன்னதமான ஒரு பரிசு என்றே நினைக்கிறேன். அதுதான் எனக்கு ஒரு அற்புதமான தொழில் வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்தது, எனவே, "there's no regret" என்று ப்ரோஸ்னன் தெரிவித்திருக்கிறார்.


"ஜேம்ஸ் பாண்ட் என்று குத்தப்பட்ட முத்திரை எப்போதும் என்னுடன் இருக்கும் என்றுதான் என்னை நான் சமாதானப்படுத்திக் கொண்டேன்.  எப்போதும்  ஜேம்ஸ் பாண்ட் என்ற பெயரை யார் பேசினாலும், அதில் நானும் ஒருவனாக இருப்பேன் என்பதே எனக்கு ஆறுதல்" என்று முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் The Guardian பத்திரிகைக்கு கொடுத்தப் பேட்டியில் கூறினார்.


Read Also | டெல்லியில் கோரதண்டவமாடும் பாலைவன வெட்டுக்கிளிகள்


ஜேம்ஸ் பாண்ட் என்ற கதாபாத்திரத்தில் இருந்து அவரது அரிதாரம் கழன்ற பிறகு, "Mamma Mia!" தொடர், "Laws of Attraction", "The Matador", "The Ghost Writer" போன்ற பிரபல திரைப்படங்கள் பலவற்றில் பியர்ஸ் ப்ரோஸ்னன் நடித்துள்ளார்.


தற்போது பியர்ஸ் ப்ரோஸ்னன், டிஸ்னியின் லைவ்-ஆக்சன் ரீமேக் திரைப்படமான "Cinderella"வில் தோன்றுவார்.


இதற்கிடையில், ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களின் வரிசையில் தனது ஐந்தாவது மற்றும் இறுதி திரைப்படமான "No Time To Die"இல் Craig நடித்திருக்கிறார்.   கொரோனா வைரஸ் பரவலின் காரணமான இந்த ஹாலிவுட் திரைப்படம் நவம்பர் மாதத்தில் வெளியிடப்பட உள்ளது.


Read Also | தண்ணீருக்குள் தன்னை மறந்த நடிகை ஸ்ருதிஹாசனின் கவர்ச்சிப் புகைப்படங்கள்


ஜேம்ஸ் பாண்ட் Ian Fleming என்பவரால் 1952இல் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை உளவாளி கதைப்பாத்திரம் ஆகும். இவர் பிரிட்டிஷின் இரகசிய சேவையின் உறுப்பினர் ஆவார். 007 இவரது இரகசிய குறியீடு. ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தை வைத்துப் பல புத்தகங்கள், திரைப்படங்கள், வானொலி நிகழ்ச்சிகள், காமிக்ஸ் கதைகள், காணொலி விளையாட்டுக்கள் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன.


தனது அனைத்துப் படைப்புகளுக்கும் ஒரு மையக் கதாபாத்திரத்தை உருவாக்கிய Ian Fleming, அமெரிக்க பறவைகள் வல்லுநரான ஜேம்ஸ்பாண்டின் பெயரை தனது கதாபாத்திரத்திற்கு வைத்தார். தனது சொந்த விருப்பங்களின் அடிப்படையிலேயே ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை உருவாக்கினார் Ian Fleming. முட்டை உணவுகள், கால்ஃப் விளையாடுவது, மற்றும் சூதாட்டம் விளையாடுவது ஆகிய தனது விருப்பங்களையே, ஜேம்ஸ்பாண்டின் விருப்பங்களாக கதாசிரியர் சித்தரித்தார் என்பது சுவராசியத் தகவல்.


Read Also | பார்வை இழப்பைத் தடுக்கக்கூடிய கண் சொட்டு மருந்து தயார்


ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பல ஆங்கிலத் திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. பல காலமாக வெளிவரும் வெற்றித்தொடர்வரிசையான ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களின் மொத்த வசூல் மட்டும் 7.040 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகையைத் தாண்டியுள்ளது. இதுவரை உலகிலேயே அதிக வசூலை ஈட்டிய நான்காவது திரைப்படத் தொடராக ஜேம்ஸ்பாண்ட் உள்ளது என்பது கூடுதல் தகவல்.


இதுவரை ஆறு நடிகர்கள் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.    


  1. சியான் கானரி (Sean connery)

  2. ஜார்ஜ் லேசன்பி (George Lazenby)

  3. ரோஜர் மூர் (Roger Moore)

  4. திமோத்தி டால்ட்டன் (Timothy Dalton)

  5. பியர்ஸ் பிராஸ்னன் (Pierce Brosnan)

  6. டேனியல் கிரெய்க் (Daniel Craig)