புதுடெல்லி: துக்ளக் பத்திரிகையின் (Thuglak) ஆசிரியரும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான எஸ்.குருமூர்த்தியுடனான பிரத்யேக உரையாடலில் அவர் பல விஷயங்களை தெரிவித்தார். இந்தக் கருத்துகள் தமிழக அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். ரஜினிகாந்தின் ”கடவுளின் எச்சரிக்கை”அறிக்கை, அரசியலுக்கு மட்டுமா, இல்லை சினிமாவுக்குமா? இதற்கு துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தியின் கருத்து என்ன?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேள்வி: இந்த தற்காலிக சுகாதார பின்னடைவு “கடவுளின் எச்சரிக்கை” என்று ரஜினியின் அறிக்கை கூறுகிறது. ரஜினி சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதைக் குறிக்கிறாரா அல்லது அரசியல் பிரவேசத்திற்கு மட்டும் இந்த ஓய்வை அறிவித்திருக்கிறாரா ரஜினிகாந்த் (Rajinikanth)?  


பதில்: நான் அதை அப்படியே பார்க்கவில்லை. எனக்கு தனிப்பட்ட முறையில் இதே போன்ற அனுபவம் உண்டு, நேரடியாக தேர்தல் அரசியலில் இறங்க வேண்டாம் என்று ஆன்மீக ஆலோசனை எனக்கும் சொல்லப்பட்டது. ஆனால் நாங்கள் இருவரும் தொடர்ந்து பொது விவகாரங்களில் செல்வாக்கு செலுத்துகிறோம். ஆனால், ரஜினியின் (Rajinikanth) நிலையும் என்னுடைய அந்தஸ்தும் வேறுபட்டது. ரஜினியின் மற்றும் அவரது வார்த்தைகள் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும். ரஜினிகாந்த் (Rajinikanth) முறையாக அரசியலில் அடியெடுத்து வைக்காமல் அரசியலில் ஒரு தாக்கத்தை உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.


Also Read | S.Gurumurthy Exclusive: அரசியல் கட்சியைத் தொடங்காமலேயே ரஜினி தேர்தலில் செல்வாக்கு செலுத்துவார்


கேள்வி: ரஜினியின் முடிவு முக்கிய கட்சிகளான அஇஅதிமுக (AIADMK) மற்றும் திமுக மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இது AIADMK க்கு ஒரு பின்னடைவு என்றும் திமுக (DMK)வுக்கு சாதகம் என்றும் கூறப்படுகிறதே அது உண்மையா?


பதில்: ரஜியின் அறிவிப்பில் இரு கட்சிகளுக்குமே ஆதாயம் தான் கிடைக்கும். வழக்கமாக ஆளும் கட்சிக்கு எதிராக போகும் வாக்குக்கள் எதிர்கட்சிக்கு கிடைக்கும், ஆனால், ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால் அது திமுக-வுக்கு (DMK) இழப்பாகி இருந்திருக்கும்.  அந்த வகையில் திமுகவுக்கு இது ஆதாயம். இதேபோல், அதிமுகவுக்கு (AIAMDK) செல்லும் திமுக எதிர்ப்பு வாக்குகள் ரஜினிக்கு சென்றிருக்கலாம்.



கேள்வி: பாஜகவுக்கு (BJP) இது எவ்வளவு பெரிய பின்னடைவு? பாஜகவில் பலர் ரஜினியை  வரவேற்கிறார்களே?


பதில்: தமிழக (TamilNadu) சட்டசபை தேர்தலில் பாஜகவின் பங்களிப்பு சொற்பமானதே. அதிமுகவுக்கு பலம் இருக்கிறது. இருந்தாலும், பா.ஜ.க (BJP) தன்னுடன் இருக்க வேண்டும் என்று அதிமுக விரும்புகிறது. பாஜக இரண்டு வழிகளில் சிந்திக்கலாம். ஒன்று, தனியாக போட்டியிட்டு தனது மதிப்பைக் காணலாம், அல்லது போதுமான தொகுதிகளைக் கொடுத்தால் அதிமுகவுடன் செல்லலாம். நிதர்சனத்தில், பாஜகவின் வாக்குகள் அதிமுகவுக்கு முக்கியமானவை என்றே நினைக்கிறேன். ரஜினி அரசியலுக்கு வராதது பாஜகவுக்கு பின்னடைவு அல்லது இழப்பு என்ரு நான் நினைக்கவில்லை.  


ஒரு வேளை ரஜினி கட்சியைத் தொடங்கி தேர்தலில் போட்டியிட்டு, பாஜகவும், ரஜினியும் ஒன்றாக இல்லாமல் இருந்திருந்தால், அந்த நிலை ரஜினிக்கு சாதகமாக  இருந்திருக்கும். அந்த ஆபத்து இப்போது பாஜகவுக்கு இல்லை. ஆனால் ரஜினி பாஜகவுக்கு ஆதரவு அளித்தால், அது பாஜகவுக்கு வாக்குகளைப் பெற்றுத்தரும். அது, தமிழகத்தின் பிரதான அரசியல் நீரோட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி  தங்களை நிலைநிறுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாகவும் இருக்கும்.  


Also Read | தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த ரஜினிகாந்திடம் "ஆதரவு" கேட்போம் BJP நம்பிக்கை


கேள்வி: ரஜினியின் ஒற்றை அறிவிப்பு மூன்று ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட எதிர்பார்ப்புகளை சுக்குநூறாக்கிவிட்டது. இது அவரது நம்பகத்தன்மையை பாதிக்கும் என்று நினைக்கிறீர்களா?


பதில்: ரஜினியின் முடிவு நம்பகத்தன்மை பற்றியது அல்ல. அவர் அதிகாரத்தை நாடிச் செல்லும்போது மட்டுமே அது நம்பகத்தன்மையின் கேள்வியாக மாறும், ரஜினிக்கு அரசியலில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை, இது அனைவருக்கும் தெரியும். அரசியலில் இணைவது தான் அவருக்கு பெருமை சேர்க்கும் என்ற நிலைமை இல்லை.


உண்மையில், தமிழக அரசியலுக்கு ரஜினி (Rajinikanth) தேவை, ரஜினிக்கு அரசியல் தேவையில்லை. எனவே, ரஜினியின் மீதான நம்பகத்தன்மை பாதிக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை. இப்போது அனைவரின் எதிர்பார்ப்புகளையும் ரஜினி பூர்த்தி செய்யாததால் ஏற்படும் ஏமாற்றம் தான் மக்கள் மனதில்  ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.  


Also Read | AIADMK vs BJP: முதல்வர் வேட்பாளரை நாங்கள் தான் முடிவு செய்வோம் -பாஜக உறுதி


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR