புதுடெல்லி: நடிகர் ரஜினிகாந்த் முறையாக அரசியலுக்குள் நுழைவதற்கு முன்பே விலகியதாக பலர் கூறுகிறார்கள், ஆனால் துக்ளக் பத்திரிகையின் (Thuglak) ஆசிரியரும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான எஸ்.குருமூர்த்தி (S.Gurumurthy) அதை மறுக்கிறார். துக்ளக் ஆசிரியருடன் ஜீ மீடியா பிரத்யேகமாக பேசியது. இந்த பிரத்யேக உரையாடலில், 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ரஜினி முறையாக தேர்தல் அரசியலில் நுழையாமல் ஒரு குறிப்பிடத்தக்க பங்கை வகிக்க முடியும் என்று குருமூர்த்தி கூறுகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேள்வி: ரஜினிகாந்தின் திடீர் யூ-டர்னை (U-turn) எப்படிப் பார்க்கிறீர்கள்? இதை நீங்கள் எதிர்பார்த்தீர்களா?


பதில்: ஹைதராபாத்தில் இருந்தபோது, ரஜினிகாந்த்தின் (Rajinikanth) உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டது பற்றி தெரிந்தபோது முதலில் வருத்தம் ஏற்பட்டது. “அவர் தனது அறிவிப்பை நிறைவேற்ற முடியுமா? என்ற கேள்வியும் எழுந்தது. அதன்பிறகு நாங்கள் பேசினோம். கோவிட் -19 (Covid-19) பிரச்சனை என்று எனக்குத் தெரியும், ஆனால் அவரது உடல்நிலை பற்றிய உண்மையான கவலை சிறுநீரகத்தை பற்றியது என்பது தான். அதுதான் அதிக கவலையளிக்கிறது.


அவருடைய ரத்த அழுத்தம் (Blood Pressure) மாறுபடுவது கவலையளிக்கிறது. ரத்த அழுத்தத்தில் ஏற்படும் மாறுபாடு சிறுநீரகம் (Kidney) நிராகரிப்பதற்கு வழிவகுக்கும். அவர் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கிய பிறகு ஏதேனும் தவறு நடந்தால், கட்சி தொடங்கியதன் நோக்கம், குறிக்கோள் சிதைந்துவிடும். ஒரு அரசியல் கட்சியை (Political Party) நடத்துவது என்பது அவருடைய மனம் மற்றும் உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.



எனவே அவர் இப்போது எடுத்த முடிவு சரியானது என்று நான் நினைக்கிறேன். அவர் தன்னுடைய தனிப்பட்ட பாதுகாப்பிற்காக அரசியலுக்கு வரும் முடிவை பரிசீலிக்கவில்லை. ஆனால் அவர் முன்னோக்கிச் சென்றிருந்தால் அவரது திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். 


ரஜினிகாந்த் (Rajinikanth) கட்சியைத் தொடங்கிவிட்டால் மட்டுமே, அவரது நோக்கமும் அவர் அடைய விரும்பியதும் நடந்துவிடாது என்பதை நான் அறிவேன். ஆனால் தமிழக அரசியலில் அவருக்கு ஒரு பங்கு உண்டு, ரஜினிகாந்தின் அந்த பங்களிப்பு தமிழ்நாட்டிற்கு(TamilNadu) அவசியம், அவர் இதைப் பற்றி சிந்திக்கிறார் என்பது தான் என்னுடைய கணிப்பு.


Also Read | தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த ரஜினிகாந்திடம் "ஆதரவு" கேட்போம் BJP நம்பிக்கை


கேள்வி: அரசியலில் ஈடுபடவில்லை என்றூ ரஜினி இரு நாட்களுக்கு முன்னதாக அறிவிப்பை வெளியிட்ட பிறகு ரஜினியின் மனநிலை எப்படி இருக்கிறது? மக்களின் நலனுக்காக தனது உயிரை இழந்தாலும், தனக்கு மகிழ்ச்சி தான் என்று ரஜினிகாந்த் (Rajinikanth) டிசம்பர் 3ஆம் தேதி கூறியிருந்தாரே?


பதில்: அவரது உடல் ஆரோக்கியத்தில் (Health) இந்த ஆபத்து முன்பே இருந்தது, அது அவருக்கும் தெரியும், அதைத் தான் அன்று அவர் குறிபிட்டிருந்தார். ஆனால், இந்த அபாயத்தையும் சமாளித்து மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு (Politics) வர விரும்பினார். ஆனால் உடல் ஆரோக்கியம் அவரது மன வேகத்தோடு ஒத்துப் போகவில்லை.   இப்போது அரசியலில் நுழைவது அனைவரையும் பாதிக்கும் என்பதால்தான் ரஜினி பின்வாங்கியிருக்கிறார். அவர் எப்போதுமே பிறரின் நலனில் அக்கறைக் கொண்டவர். அரசியல் கட்சியைத் தொடங்காமல் தேர்தல் நடைமுறைகளில் செல்வாக்கு செலுத்தலாம் என்று ரஜினி சிந்திக்கிறார் என்றே நான் நினைக்கிறேன்.


Also Read | கட்சி தொடங்கவில்லை; அரசியலுக்கு வரமுடியவில்லை, மன்னியுங்கள்! - ரஜினி 


கேள்வி: 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக ரஜினியும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (BJP-led NDA) ஆதரவை காட்டுவதைப் போன்ற ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். 2021 தமிழக சட்டசபை தேர்தல் தேர்தலிலும் (2021 Tamil Nadu assembly polls) அதே போன்ற ஆதரவை பாஜகவுக்கு ரஜினி தருவார் என்று நினைக்கிறீர்களா? 


பதில்: உண்மையில், ரஜினிகாந்த், பாரதிய ஜனதா கட்சிக்கு (BJP) அவர் ஆதரித்தால், அது ஒரு ஆழமான ஈடுபாட்டை வெளிப்படுத்துவதாகவே இருக்கும். காங்கிரஸ் (Congress) வெற்றி பெறும், ராகுல் காந்தி (Rahul Gandhi) பிரதமராகிவிடுவார் என்ற எண்ணம் இருந்ததால், 2019 நாடாளுமன்றத் தேர்தலின் சூழ்நிலைகள் வேறுபட்டன. நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழகத்தின் உள்ளூர் பிரச்சனைகள் முக்கிய பங்கு வகிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன்.


தமிழ்நாட்டின் உள்ளூர் பிரச்சனைகளின் அடிப்பப்டையில் பார்க்கும்போது அதிமுக (AIADMK) மற்றும் திமுக (DMK) என இரு பிரதான கட்சிகளுக்கும் இடையில் பரஸ்பர விரோத வாக்குவங்கிகள் உள்ளன. அதில் ரஜினியின் கருத்து தாக்கத்தை ஏற்படுத்தலாம். இன்னும் இரண்டு-மூன்று மாதங்களில், தேர்தல்கள் நெருங்கி வரும் சமயத்தில் ரஜினியின் கருத்துகளும், அது அரசியலிலும் தேர்தலிலும் ஏற்படுத்தும் உண்மையான தாக்கத்தை நாம் காண்போம்.


Also Read | AIADMK vs BJP: முதல்வர் வேட்பாளரை நாங்கள் தான் முடிவு செய்வோம் -பாஜக உறுதி


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR