தகவல் திருட்டு: பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் கைது செய்யப்படலாம்?
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக்கில் இருந்து தகவல் திருடியதாக வந்ததகவலை அடுத்து, மார்க் கைது செய்யப்பட்டாலும் என தகவல் வந்துள்ளது.
பலர் பேஸ்புக் செயலி பாதுகாப்பானது இல்லை என்று குற்றச்சாட்டு வைத்து வந்த நிலையில், அது உண்மை என்று நிருபிக்கும் வகையில், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை திருடி இருக்கிறது. இதற்கு பேஸ்புக் நிறுவனம் பயனாளர்களின் அனுமதி இல்லாமல் தகவல்களை வழங்கிய உள்ளது. பேஸ்புக் நிறுவனத்திற்கு தெரிந்துதான் தகவல்களை திருடப்பட்டது என கூறப்படுகிறது.
லண்டனை தலைமையிடமாக கொண்டு கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனம் உலகம் முழுக்க "தேர்தல் ஆலோசனை மையம்" என்ற பேரில், தேர்தல் தொடர்பான ஆலோசனைகள் வழங்கி வருகிறது. தேர்தல் குறித்து ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து, தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது போன்ற ஆலோசனைகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் திருட்டு விவகாரம்: பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் பெரும் வீழ்ச்சி
இப்படி தகவல்களைத் திருடி, டிரம்ப் தேர்தலில் வெற்றிபெற உதவி செய்ததாகவும், ஐரோப்ப யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற நடந்த வாக்கெடுப்பில் குளறுபடி செய்ததாகவும் சேனல் 4 செய்தி நிறுவம் வீடியோவை வெளியிட்டது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து இங்கிலாந்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் வரும் 26-ம் தேதிக்குள் முகநூல் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் நேரில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் உலக முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இச்சம்பவம் குறித்து இதுவரை எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்.
பேஸ்புக் தகவல் திருட்டு: மார்க் ஜூக்கர்பெர்க்கை எச்சரித்த மத்திய அரசு
அனைத்து முக்கிய நாடுகளும் பேஸ்புக் குறித்து வந்த தகவலை அடுத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது உண்மை என்று நிருபிக்கும் பட்சத்தில் பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது. விசாரணைக்கு பிறகு உண்மை நிலவரம் தெரியவரும்.