உத்திரப் பிரதேசத்தில் 4 வயது சிறுமி ஒருவர் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமான முறையில் அடித்துக் கொள்ளப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்திர பிரதேச மாநிலம் கத்தோலியில் 4 வயது சிறுமி ஒருவர், தன் வீட்டிற்கு அருகில் இருக்கம் செங்கல் சூலை பகுதியில் ரத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


இவரது மரணம் குறித்த தகவல்கள் ஏதும் அறியப்படாத நிலையில், அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் கொலையாளிகளை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளனர். இந்த புகாரில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது.. கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் மர்ம பகுதியில் ரத்த காயங்கள் தென்பட்டதாகவம், சடலத்திற்கு அருகில் ரத்த கரைகளுடனான செங்கற்கள் கண்டெடுக்கப் பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.


எனவே தங்கள் குழந்தையினை மர்ம நபர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொடூர முறையில் கொலை செய்திருக்கலாம் என தெரவித்துள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரி ராஜிவ் குமார் சிங் தெரிவிக்கையில்... வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்ககொள்ளப்பட்டு வருவதாகவும். தற்போது குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரவித்துள்ளார்.