மாஸ்கோ: ரஷ்யாவின் யாகுட்ஸ்க் விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் ஒரு சரக்கு விமானம் புறப்பட்டுள்ளது. அந்த சரக்கு விமானம் சுமார் 368 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2400 கோடி) மதிப்பிலான தங்கம், பிளாட்டினம் மற்றும் வைரம் ஆகியற்றை எடுத்துச் சென்றுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், விமானம் புறப்பட்ட சில நொடிகளில் அதன் சரக்கு பெட்டக கதவில் கோளாறு ஏற்பட்டு திறந்துள்ளது. இதனால் அதிலிருந்த தங்க கட்டிகள், பிளாட்டினம் மற்றும் வைரம் குவியல் குவியலாக மழை போன்று கீழே பொழிந்துள்ளது. உடனே விமானம் அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.


இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்து விலைமதிப்பற்ற பொருட்கள் தொலைந்துள்ளது. இதையடுத்து விமான நிலையத்தை அதிகாரிகள் மூடியுள்ளனர். விமானம் பழுதானது தெரியாமல் சரக்குகளை ஏற்ற அனுமதித்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 


முதற்கட்டமாக தொழில்நுட்ப அதிகாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.சரக்கு விமானத்தில் இருந்து வைர மற்றும் தங்க கட்டிகள் மழை போல் பொழிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.