ஆளுநரை சரமாரியாக தாக்கிய கிரீஸ் பொதுமக்கள்!
கிரீஸின் இரண்டாவது பெரிய நகரமான தசலோனிகி நகர ஆளுநரை, அப்பகுதி பொதுமக்கள் தாக்கியது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
கிரீஸின் இரண்டாவது பெரிய நகரமான தசலோனிகி நகர ஆளுநரை, அப்பகுதி பொதுமக்கள் தாக்கியது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
75 வயதாகும் யானில் போட்டரிஸ் தசலோனிகி நகர ஆளுநராக பதவி வகித்து வருகின்றார். தேசியவாதிகளின் எதிர்ப்பாளராக பார்க்கப்படும் இவரை அப்பகுதி மக்கள் தாக்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முதலாம் உலக போரில் துருக்கியர்களால் கொல்லப்பட்ட கிரேக்க இனத்தவர்களை நினைவுக்கூரும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் வருகைபுரிந்துள்ளார்.
அப்போது அங்கு கூடியிருந்த தேசியவாதிகள் சிலர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தின் போது அங்கு குவிக்கப்பட்டிருந்து காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
கிரேக்க பிரதமர் அலெக்ஸிஸ் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது... "ஆளுநரை தாக்கியவர்கள் வலது சாரிகள் என்று குறிப்பிட்டுள்ளார், மேலும் தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
ஆனால் கிரேக்கத்தை ஆளும் இடதுசாரி சிரிஸா கட்சி இச்சம்பவம் ஆனது பாசிச செயல் என்று குறிப்பிட்டுள்ளது.