சென்னை ரசிகர்களின் அன்புக்கு நானடிமை -ஹர்பஜன் ட்வீட்
உங்கள் அன்புக்கு நானடிமை! நீங்க வேற லெவல் மாஸ் யா. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என சென்னை ரசிகர்களை பாராட்டிய சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங்.
IPL 2018 தொடரின் 11-வது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் விளையாடும் எட்டு அணிகளில் சென்னை அணியும் ஒன்று என்பது அனைவருக்கும் அறிந்ததே.
சூதாட்ட காரணமாக கடந்த இரண்டு சீசனில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இம்முறை களமிறங்கி உள்ளதால், சி.எஸ்.கே அணி மீது அதிக எதிர்பார்ப்புக் கிளம்பியிருந்தது ரசிகர்கள் மத்தியில், குறிப்பபாக தமிழ்நாட்டு ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆட்டத்தை காணா ஆர்வமாக இருந்தனர். மேலும் சென்னை மைதானத்தில் நடைபெற இருந்த போட்டிக்கான அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்தது.
ஐபிஎல் 2018: ஆட்டம் போட வைக்கும் சிஎஸ்கே ரிட்டன்ஸ் பாடல் வீடியோ!!
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. அப்பொழுது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதவரை ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடத்தக்கூடாது என மைதனத்தை முற்றுகையிட்டனர் போராட்டக்காரர்கள்.
ஒரே ஒரு போட்டி சென்னையில் நடைபெற்றதை அடுத்து, மற்ற போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டது. நாளை ராஜஸ்தான் அணிக்கும், சென்னை அணிக்கும் இடையே போட்டி நடைபெற உள்ளது.
IPL 2018: புனேவுக்கு சிறப்பு ரயிலில் விரைந்த சென்னை CSK ரசிகர்கள்!!
இந்நிலையில், புனேவில் நடக்கும் போட்டியை காண சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் சுமார் ஆயிரம் பேர் சிறப்பு ரயிலில் புனேவுக்கு பயணம் செய்துள்ளனர். அவர்களுக்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் சென்னை அணி ரசிகர்கள் மன்றம் இந்த ஏற்பாட்டைச் செய்து கொடுத்துள்ளது. தற்போது பயணம் மேற்கொண்டுள்ள சி.எஸ்.கே ரசிகர்களின் புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளது.
#IPL_2018: பேனர், கொடிகளுக்கு தடை -கிரிக்கெட் மைதான நிர்வாகம்!
இதனையடுத்து, சி.எஸ்.கே ரசிகர்களின் பயணத்தை குறித்து, சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியது,
"பார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகளை". அமெரிக்காலயே போய் நீங்க மேட்ச் நடத்தினாலும் விசில் போட தார தப்பட்டையோட எமை வாழ்த்த தேரேரும் என் தமிழினம்! உங்கள் அன்புக்கு நானடிமை! நீங்க வேற லெவல் மாஸ் யா. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்" என்று ட்வீட் செய்துள்ளார்.