ஐபிஎல் 2018: ஆட்டம் போட வைக்கும் சிஎஸ்கே ரிட்டன்ஸ் பாடல் வீடியோ!!

சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் சிஎஸ்கே ரிட்டன்ஸ் பாடல் வீடியோ.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 26, 2018, 08:47 PM IST
ஐபிஎல் 2018: ஆட்டம் போட வைக்கும் சிஎஸ்கே ரிட்டன்ஸ் பாடல் வீடியோ!! title=

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு கடந்த 10 வருடமாக நடந்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற IPL தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டு இடைகால தடை விதிக்கப்பட்டது. கடந்த இரண்டு சீசனில் விளையாடாத சென்னை அணி இந்த முறை களமிறங்குகின்றன. இதனால் தமிழ்நாட்டு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

அதுவும் ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறும் முதல் ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிவீரர்கள் அனைவரும் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பயிற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை அணியை வரவேற்கும் வகையில், சென்னை சூப்பர் கிங்க்ஸ் ரிட்டன்ஸ் என்ற பாடலை கார்த்திக் ராஜன் வெளியிட்டுள்ளார். இந்த பாடலுக்கு யுவராஜ் சந்தரா இசை அமைத்து உள்ளார். தற்போது இந்த வீடியோ பட்டைய கிளப்பி வருகிறது. 

இதேபோல Come Back CSK என்னும் பெயரில் இசைப்பாடல் ஒன்று வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News