வயிற்றில் 4 கிலோ கட்டி | பெண்ணின் அவதியை போக்கிய மருத்துவர்கள்
கர்ப்பப் பையில் 4 கிலோ கட்டியுடன் அவதியுற்று வந்த பெண்ணை அரசு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகலா, வயது 37. இவர் கடந்த 10 நாட்களாக சிறுநீர் கழிக்கும் பகுதியில் ரத்த போக்கு ஏற்பட்டு மலம் கழிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். பிரச்னைக்கு காரணம் அறிய சசிகலா திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் 10 நாட்களுக்கு முன் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் கர்ப்பப் பையில் கட்டி வளர்ந்து இருப்பது தெரியவந்தது. அறுவை சிகிச்சை மூலம் அந்தக் கட்சியை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
மேலும் படிக்க | இந்த ஸ்பெஷல் ஜூஸ் போதும்; சுகர் எப்படி குறையுதுன்னு பாருங்க
பொதுவாக இதுமாதிரியான சிக்கலான அறுவை சிகிச்சைகளை நடத்த நோயாளிகளை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்புவது வழக்கம். ஆனால் தரம் மேம்படுத்தப்பட்ட திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையிலேயே இந்த அறுவை சிகிச்சையை நடத்த மருத்துவமனை முதல்வர் அரசி ஸ்ரீவ்த்சன் முடிவு செய்தார். அதன்படி அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 4 கிலோ எடையுள்ள அந்தக் கட்டி அகற்றப்பட்டது. கர்ப்பப்பையில் வளரும் இதுபோன்ற கட்டிகளால் புற்றுநோய் வரக்கூடிய அபாயம் இருப்பதாகவும் தற்போது அந்த நிலை முற்றிலும் மாறியிருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க | தடுப்பூசி போட்டவர்களுக்கு வரும் கொரோனா பாதிப்பின் மாறிய அறிகுறிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ