இந்த இரண்டு உணவுகளை எல்லாம் ஒருபோதும் சேர்த்து சாப்பிடாதீர்கள் - உணவு விஷமாகும்
சாப்பிடும் உணவுகளில் சில காம்பினேஷன்கள் விஷமாக மாறும் என்பதால், அவற்றை ஒன்றாகவோ அல்லது சாப்பிட்ட பிறகோ சாப்பிடக்கூடாது. அவை என்னென்ன உணவுகள் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு, உணவே மருந்து என்ற பழமொழிகளை கேள்விப்பட்டிருப்பீர்கள். இவை இரண்டிலும் ஆழமான பொருள் இருப்பதாலேயே காலங்காலமாக எல்லா தலைமுறைக்கும் அது கடத்தப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது. அதுன்னவென்றால், பசிக்காக கூட சில பொருட்களை ஒன்றாக சேர்த்து நாம் சாப்பிட்டு விடக்கூடாது. அது நம்முடைய உடலுக்கு தீங்கு விளைவிக்கும். விஷமாக மாறிவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது. எந்தெந்த உணவு பொருட்களை, எந்தெந்த உணவு பொருட்களோடு சேர்த்து சாப்பிடவே கூடாது என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
எந்த உணவை சேர்த்து சாப்பிடக்கூடாது:
மருத்துவ குணம் நிறைந்தது தேன். ஆரோக்கியம் நிறைந்தது நெய். தினமும் ஒரு சொட்டு நெய்யாவது உணவில் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு மீறி நெய் சாப்பிட்டால் தான் தவறு. உடல் சூட்டை குறைக்க தினமும் இரண்டு சொட்டு நெய் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று சொல்லுவார்கள். ஆனால் தேனையும் நெய்யையும் சம அளவில் கலந்து சாப்பிட்டால் அது நஞ்சாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தொப்பையை 10 நாளில் பாதியாக குறைக்கும் பிளாங்க் பயிற்சி... எளிதாக செய்யும் முறை..!
நிறைய பேர் விருந்து சாப்பாடு சாப்பிட்டு முடித்த பின்பு, வாழைப்பழம் பாயாசம் பிசைந்து சாப்பிட்டு, அதன் பிறகு தயிர் சாதம் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் கூடுமானவரை வாழைப்பழம் சாப்பிட்ட பின்பு தயிர் சாப்பிடுவதை குறைக்க வேண்டும். தயிர் சாதம் சாப்பிட்ட பின்பு வாழைப்பழம் சாப்பிடுவதை குறைக்க வேண்டும். இந்த இரண்டையும் தொடர்ந்து ஒன்றாக சாப்பிட்டு வந்தால் உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
நெய்யை அதிக நேரம் வெண்கல பாத்திரத்தில் வைத்து சாப்பிடக்கூடாது. அடுத்து, சாப்பாடு சாப்பிட்ட உடனேயே, பழ வகைகளை சாப்பிடாதீர்கள். உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரம் இடைவெளி விட்டு, பழம் சாப்பிடுவது நல்லது. முருங்கைக்கீரை முள்ளங்கி மற்ற கீரை வகைகளை சாப்பிட்ட பின்பு பால் முட்டை இவைகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது.
சமைத்து முடித்த பின்பு, அந்த உணவோடு சமைக்காத பொருளை சேர்த்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதலை கொடுக்கும். உதாரணத்திற்கு சமைத்த உணவில் உப்பு போதவில்லை என்று அப்படியே சாப்பாட்டில் உப்பு போட்டு கலந்து சாப்பிடக்கூடாது. ஏதாவது ஒரு சமயம் இப்படி செய்யலாம் தினம்தோறும் இப்படி செய்யக்கூடாது.
ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சளி தொந்தரவு உள்ளவர்கள் தக்காளிப்பழம், பூசணிக்காய், முள்ளங்கி இப்படி குளிர்ச்சி தன்மை கொண்ட காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டாம். மேல் சொன்ன இந்த சின்ன சின்ன ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகள் உங்களுக்கு பிடித்திருந்தால் முயற்சி செய்த பலன் பெறலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ