ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஜூஸ்: இப்படி பழச்சாற்றை தயாரிக்கக்கூடாது
ஜூஸ் உடம்புக்கு நல்லது தான், ஆனால் எப்படியெல்லாம் அதை தயாரிக்கக்கூடாது என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்...
ஆரோக்கியமாக இருக்க அடிக்கடி பழச்சாறு குடிப்பது பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், வீட்டில் ஜூஸ் தயாரிக்கும் போது, நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் சில விஷயங்களை தெரியாமலேயே நாம் செய்துவிடுகிறோம்.
இது பழரசத்தின் சுவையை மாற்றி, குடிக்கவே பிடிக்காமல் போகிகிறது. சிலர் காய்கனிகளில் இருந்து உடனடியாக சாறு தயாரித்து குடிக்க விரும்புவார்கள். அவர்கள், மிக்ஸி அல்லது ஜூஸரின் உதவியுடன் ஜூஸ் செய்கின்றனர்.
வீட்டில் தயாரிக்கும் பானங்களை சரியாகச் செய்யாவிட்டால், அதன் ஊட்டச்சத்து அளவு குறைவதுடன் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஜூஸ் தயாரித்து குடிக்க விரும்பினால், அதைச் செய்யும்போது சில விஷயங்களை எப்போதும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | Health Care Tips: இரவில் சாதம் சாப்பிடுவது நல்லதா, கெட்டதா
இயற்கையான இனிப்பு பழங்களை தேர்வு செய்யவும்
சிலர் ஜூஸ் என்ற பெயரில் சர்பத்தை குடிப்பார்கள். அதாவது பழத்துடன் அதிக இனிப்பு அல்லது சர்க்கரையைப் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்கான எளிதான வழிகளில் ஒன்று சாறு என்பதை புரிந்துக் கொள்ளவும். ஆனால் அதில் சர்க்கரையை அதிகமாக சேர்த்து தயாரிப்பது அதிலுள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கும். எனவே, சாறு தயாரிக்கும் போது சர்க்கரை அல்லது இனிப்பு பழங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, காய்கறிகளைப் பயன்படுத்த வேண்டும்.
பச்சை காய்கறிகளின் சரியான பயன்பாடு
பச்சை காய்கறிகளின் சாறு ஒப்பீட்டளவில் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது, ஆனால் அதிகப்படியான காய்கறிகளின் சேர்க்கையால், ஜூஸின் சுவை கெட்டுப்போய்விடும். அதோடு குடிப்பதற்கும் சுவையாக இருக்காது.
மேலும் படிக்க | கோடையில் இந்த பானங்களை குடித்தால், சட்டுனு எடையை குறைக்கலாம்
சில சமயங்களில் உடலுக்கு நல்லது என்றாலும் சுவையாக இல்லாவிட்டால் அதை குடிக்க முடியாமல் சிரமப்பட வேண்டியிருக்கும். எனவே, பச்சைக் காய்கறிகள் பயன்படுத்தி வைத்து ஜூஸ் செய்தால் எந்தெந்த காய்கறிகளை ஜோடி சேர்க்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கவும். கசப்புச் சுவையுள்ள காய்கறிகளைக் கலந்து விட்டால் சாற்றின் சுவையைக் கெடுத்துவிடும்.
இப்போதெல்லாம், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஜூஸ் டிஸ்பென்சர் உள்ளது, இது சில நிமிடங்களில் சாறு தயாரிக்க உதவுகிறது. ஆனால் இந்த இயந்திரம் சாற்றின் ஊட்டச்சத்தை குறைக்கிறது தெரியுமா?
இந்த ஜூஸர் அதிக வெப்பத்தை உருவாக்குகிறது, அந்த அதிக வெப்பமானது, பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அழிக்கிறது. எனவே ஒரு ஜூஸரைப் பயன்படுத்தினால், அது மிகவும் சூடாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
அதேபோல, ஜூஸை தயாரித்த பிறகு, உடனடியாக அதை குடிக்கவும், குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டாம்.
மேலும் படிக்க | புரோட்டீன் அள்ளிக் கொட்டிக் கிடக்கும் டோஃபு: ஊட்டச்சத்துக்களின் உறைவிடம்
பழச்சாறு குடிக்க சிறந்த நேரம்
ஜூஸ் செய்த உடனேயே குடிக்க வேண்டும். உதாரணமாக, காலை செய்த பழச்சாற்றை மாலையில் குடித்தால், அது ஊட்டச்சத்து கொடுப்பதற்குப் பதிலாக ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். வீட்டில் தயாரிக்கப்பட்ட சாற்றை 24 மணிநேரம் வரை வைத்திருக்கலாம், ஆனால் உடனடியாக அதை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
விதைகளை சாறில் கலக்க வேண்டாம்
காய்கறிகள் அல்லது பழங்களைக் கொண்டு சாறு தயாரிக்கும்போது, அவற்றில் இருந்து விதைகளை நீக்க வேண்டும். ஒரு விதை கூட பழச்சாற்றின் சுவையை கெடுத்துவிடும். அதோடு, சில பழங்கள் மற்றும் காய்கறிகளின் விதைகளை உட்கொண்டால், அவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தலவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | High cholesterol இருந்தால் என்ன ஆகும்; அறிகுறிகள் மற்றும் காரணங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR