சாதம் உண்பதால் ஏற்படும் நன்மைகள் / தீமைகள்: நம் நாட்டின் பிரதான உணவாக அரிசி கருதப்படுகின்றது. சாதம் பலரது விருப்பமான உணவாகவும் உள்ளது. அரிசியை சாதமாக வடிப்பது மிக எளிது.
சாதத்தில் அதிக அளவு ஆற்றல் மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. இது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும். கால்சியம், புரோட்டீன், இரும்புச்சத்து, மக்னீசியம் போன்றவையும் இதில் அதிகம் உள்ளன. இரவிலும் பலர் சாதம் சாப்பிடுவதை நாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால், சாதத்தை அதிகமாக உட்கொண்டால், குறிப்பாக இரவில் உட்கொண்டால், உடல் எடை அதிகரிக்கும் என்ற கருத்தும் பலரிடம் உள்ளது. இரவில் சாதம் சாப்பிடலாமா? இரவில் சாதம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இரவில் சாதம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
இரவில் சாதம் சாப்பிடுவதால் சில பிரச்சனைகள் வரக்கூடும். இரவில் சாதம் சாப்பிட்டால் வயதானவர்களுக்கு சர்க்கரை வியாதி வரும் வாய்ப்புகள் அதிகரிக்கும். இதனுடன் மேலும் பல நோய்களும் வர வாய்ப்புள்ளது. இது தவிர ஆஸ்துமா, சளி, காய்ச்சல் போன்ற உடல் உபாதைகளும் வரலாம்.
அடிக்கடி சளி பிரச்சனை வருபவர்களும், இரவில் தாமதமாக சாப்பிடுபவர்களும் இரவில் சாதம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லதாகும்.
மேலும் படிக்க |தர்பூசணிப்பழத்தை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடலாமா: கண்டிப்பா கூடாது, விவரம் இதோ
இரவில் சாதம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- வயிற்றுக்கு நன்மை பயக்கும்
அரிசி வயிற்று நோய்களுக்கு நன்மை பயக்கும். ஏனென்றால் இது எளிதில் ஜீரணமாகக் கூடியது. இது செரிமான அமைப்பை நன்றாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இது பெருங்குடல் பிரச்சனை, வயிற்று வலி மற்றும் அஜீரணத்தையும் குணப்படுத்துகிறது.
- கார்போஹைட்ரேட் நிறைந்தது
அரிசியில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. இது உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது. மேலும் இது நம் உடலுக்கு அதிக ஆற்றலையும் தருகிறது. அரிசியில் காணப்படும் கார்போஹைட்ரேட் உடலுக்கு மிகவும் நல்லது.
- செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும்
உணவில் இருந்து கிடைக்கும் சத்துக்களை உடலின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல உங்கள் செரிமான அமைப்பு நன்றாக செயல்பட வேண்டும். இந்த அமைப்பின் மூலம்தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்கள் சென்றடைகின்றன.
அரிசி செரிமான அமைப்புக்கு மிகவும் நன்மை பயக்கும். அதை உட்கொள்வதால், பலவீனமாக இருக்கும் செரிமான அமைப்பும் சீராகும். இது தவிர, இது உங்கள் வயிற்றின் வெப்பத்தையும் தணிக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தலவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | டயட்ல இருக்கீங்களா: இவைதான் டயட்டிங்கின் பக்க விளைவுகள், ஜாக்கிரதை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR