சிலருக்கு டயட் அல்லது உடற்பயிற்சி செய்தாலும், உடல் எடையை குறைப்பது கடினமாக உள்ளது. அவர்களுக்கு அதிகபட்ச பவுண்டுகளை இழப்பது மிகவும் சவாலானதாக இருக்கும். இதனால் அவர்கள் எடுக்கும் முயற்சியின் மேல் அவநம்பிக்கை ஏற்பட்டு அதில் இருந்து பாதியில் வெளியேறவும் வாய்ப்புகள் உள்ளது. உடல் எடையை குறைக்க நீங்கள் முயற்சி செய்துவிட்டால் அன்றாடம் பெரும் பகுதியை உங்களின் இந்த முயற்சிக்கு ஒதுக்கியாக வேண்டும். அதாவது, சிறப்பு கவனத்தை செலுத்தியாக வேண்டும். டையட் உணவு மற்றும் உடற்பயிற்சி செய்வது கடினமாக இருக்கும் சிலரில் நீங்களும் இருந்தால், உங்கள் எடையைக் குறைக்கவும், எதிர்காலத்தில் எடை அதிகரிப்பதைத் தடுக்க உதவும் சில நிரூபிக்கப்பட்ட உதவிக்குறிப்புகள் உள்ளன. இந்த குறிப்புகள் சரியான உணவு திட்டம் அல்லது எந்த உடற்பயிற்சி முறையையும் பின்பற்றுவதை கட்டுப்படுத்தாது. ஆனால் எடை இழப்பை ஊக்குவிக்க குறைவான கலோரிகளை சாப்பிட உதவும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | உருளைக்கிழங்கு ஆரோக்கியமானதா இல்லையா? சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?.


உணவு அல்லது உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க 6 நிரூபிக்கப்பட்ட குறிப்புகள்


1. முழுமையாகவும் மெதுவாகவும் மெல்லுங்கள்: நீங்கள் உங்கள் உணவை முழுமையாக மெல்லும்போது, நீங்கள் மெதுவாக சாப்பிடுவீர்கள். இது குறைந்த கலோரி உட்கொள்ளலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைவான உணவைக் கூட நீண்ட நேரம் சாப்பிடுவீர்கள். அதுவே உங்களுக்கு உணவு போதும் என்ற மனநிலையை உருவாக்கிவிடும். இயல்பாக உணவு எடுத்துக் கொள்வது குறையும். 


2. புரதத்தை தவறவிடாதீர்கள்: உணவில் திருப்தியை உணரவும், செரிமான நேரத்தை அதிகரிக்கவும் புரதம் உதவுகிறது. இது உங்களை நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்கும். பசி எடுக்காது. இன்சுலின் சுரப்பை சீராக வைத்திருப்பதுடன் சிற்றுண்டிகள் மீது நாட்டம் செல்வது தடுத்துவிடும்.


3. முழு தானியங்களை அதிகம் சாப்பிடுங்கள்: முழு தானியங்கள் உடலுக்கு மிகவும் நல்லது, ஆரோக்கியமானது. அதில் அதிக நார்ச்சத்து இருப்பதால், நீங்கள் விரைவில் வயிறு நிறைந்தது போன்று உணருவீர்கள். கொஞ்சம் சாப்பிட்டாலும் போதும் என்ற மன நிலை வந்துவிடும். கூடுதலாக, இந்த முழு தானியங்கள் ஜீரணிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வதால், நீண்ட நேரம் புத்துணர்ச்சியாக இருப்பதுடன் பசி அடிக்கடி எடுக்காது.


4. வீட்டில் சமைத்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்: உங்கள் உணவில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளின் அளவை அதிகரிக்க ஒரு சிறந்த வழி உங்கள் சொந்த உணவை வீட்டிலேயே தயாரிப்பதாகும். வீட்டில் அதிக உணவை சமைப்பவர்கள், அடிக்கடி வெளியில் சாப்பிடுபவர்கள் அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்பவர்களை விட எடை குறைவாக இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.


5. தொடர்ந்து தண்ணீர் குடிக்கவும்: தண்ணீர் குடிப்பதால், உணவுக்கு முன் குடித்தால், குறைவாக சாப்பிடவும், உடல் எடையை குறைக்கவும் உதவும். இது கலோரி உட்கொள்ளல் மற்றும் பசியைக் குறைக்கும் அதே வேளையில் முழுமையையும் திருப்தியையும் அதிகரிக்கும்.


5. மன அழுத்தத்தைத் தவிர்க்கவும் மற்றும் போதுமான ஓய்வு பெறவும்: மன அழுத்தம் மற்றும் தூக்கம் ஆரோக்கியம் என்று வரும்போது அடிக்கடி புறக்கணிக்கப்படுகிறது. உண்மையில், இரண்டும் உங்கள் பசி மற்றும் எடையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.


மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அளவை உடனடியாக கட்டுப்படுத்த.. இந்த 5 உணவுகள் உதவும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ