குழந்தைகளின் எலும்புகளை இரும்பு போல் வலுவாக்கலாம்! ‘இதை’ செய்தால் போதும்..
அனைத்து பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தைகளின் எலும்புகளை வலுவாக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். அதை எப்படி நிறைவேற்றிக்கொள்வது? இங்கு பார்ப்போம்.
மனம் நலம் பெறுவதோ, உடல் நலம் பெறுவதோ, எதுவாக இருப்பினும் அது குழந்தை பருவத்தில் இருந்தே ஆரம்பிக்கும் என்று கூறப்படுவது வழக்கம். “விளையும் பயிர் முளையிலேயே தெரியும்” என்பது போல, குழந்தைகளின் உடலில் ஏதேனும் பிரச்சனை இருந்து, அதை சிறுவயதிலேயே கண்டு பிடித்தால் விரைவில் சரிசெய்து கொள்ளலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில், எதிர்காலத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் குழந்தையை பார்த்துக்கொள்ள அவர்களின் உடல் நலனும், எலும்பும் வலுவாக இருக்க வேண்டியது அவசியம். அதற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டும்? இங்கு பார்ப்போம்.
உணவுகள்:
இந்தியாவை பொறுத்தவரை, நமது உணவு பழக்கத்தினாலேயே பாதி நோய் நொடிகளில் இருந்து காப்பாற்றப்படுகிறோம். அதே போல, எலும்புகளை வலுவாக்கும் சத்துகளும் நம் ஊர் உணவுகளில் இருக்கிறது. கால்சியம் நிறைந்த ராகி, நாம் கடையில் வாங்கும் ஆர்கானிக் உணவுகளை விட அதிக நன்மை பயக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது போல, இந்திய பாரம்பரிய உணவுகளை குழந்தைகளின் டயட்டில் சேர்க்கலாம்.
யோகா:
யோகா என்பது, நம்மை வலுவாக்க காலம் காலமாக செய்யப்படும் ஒரு விஷயமாகும். இதை செய்வதால் நமது எலும்புகள் வலுவடைவது மட்டுமன்றி, உடல் தோரணைகள் மாறியிருந்தால் அதுவும் மாறும். குழந்தைகள் செய்யக்கூடிய சில மிதமான யோகாசனங்கள் இருக்கின்றன. இதை அவர்களை செய்ய வைக்கலாம். யோகாசனம் செய்வதால் குழந்தைகளின் எலும்பு வலு அதிகரிக்கிறது என்பது சில மருத்துவ ஆராய்ச்சிகளிலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
எள் விதைகள்:
எள் விதைகளில், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சத்துகள், நம் எலும்பை வலுவாக்க கூடும். தினமும் ஒரு தேக்கரண்டி எள் விதைகள் சாப்பிடுவதால், உடலுக்கு தேவையான சத்துகளும் கிடைப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து வெளியிடப்பட்டிருகும் ஒரு மருத்துவ ஆராய்ச்சியில், தினமும் சாதம் அல்லது ஸ்னாக்ஸ் உடன் எள் விதைகளை சாப்பிடும் குழந்தைகள் வலிமையாக வளருவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
உடற்பயிற்சிகள்:
“ஓடி விளையாடு பாப்பா ஓய்ந்திருக்கலாகாது பாப்பா” என்று பாரதியார் கூறியது போல, குழந்தைகள் ஓடி ஆட நாம் அவர்களை ஊக்குவிப்பது மிகவும் முக்கியமாகும். இதனால், எலும்புகளுக்கு வலு சேருவதுடன் வளரும் போது உருவாகும் எலும்புகளும் வலுவடையலாம் என கூறப்படுகிறது. ஓடுவது, நடப்பது, தாவுவது போன்ற உடற்பயிற்சிகளை அவர்களின் தினசரி நடவடிக்கைகளில் இணைத்துக்கொள்ளலாம்.
மூலிகைகள்:
குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் போது, அதில் சிறிதளவேனும் மசாலா மற்றும் மூலிகை பொருட்களை சிறிதளவேனும் சேர்த்துக்கொள்வது கட்டாயம். மஞ்சள், வெந்தையம் போன்றவற்றை சமையலில் சேர்த்துக்கொள்வது குழந்தைகளின் எலும்புகளை வலுவடைய செய்யுமாம். இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் ஒரு ஆராய்ச்சியில், தினமும் மஞ்சளை உணவில் சேர்த்துக்கொள்ளும் குழந்தைகளுக்கு எலும்பு வலுவுடன் காணப்படுவதாகவும் எலும்பு மறு உருவாக்கம் தவிர்க்கப்படுவதாகவும் கூறப்பட்டிருக்கிறது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ