யூரிக் அமிலத்தை குறைக்க உதவும் ஆரோக்கியமான வீட்டு வைத்தியங்கள் இதோ
Uric Acid Control Tips: சில இயற்கையான வழிகளில் யூரிக் அமிக அளவை கட்டுப்படுத்தலாம். இதற்கு தினசரி டயட்டில் சில உணவுகளை சேர்த்துக்கொள்வது நன்மை பயக்கும்.
Uric Acid Control Tips: இன்றைய நவீன உலகில் நம்மை பல வித நோய்கள் ஆட்கொள்கின்றன. இவை பெரும்பாலும் நமது வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையுடன் தொடர்பு கொண்டுள்ளன. இப்படிப்பட்ட உடல் உபாதைகளில் ஒன்றுதான் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாகும் நிலை. இது சில சமயம் மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகின்றது.
உடலில் பியூரின்கள் உடைக்கப்படும்போது யூரிக் அமிலம் உருவாகிறது. உடலுக்குள் பியூரிகள் எவ்வாறு வருகின்றன? பியூரின்கள் உடலில் இயற்கையாகவும், இன்னும் பல வித உணவுகளிலும் காணப்படுகின்றன. இவை உடைக்கப்படும்போது உருவாகும் யூரிக் அமிலம் பொதுவாக இரத்தத்தில் கரைந்து சிறுநீரகங்களின் மூலம் சிறுநீர் வழியாக உடலில் இருந்து வெளியேறுகிறது.
எனினும், உடலில் பியூரின்களின் அளவு அதிகரிக்கத் தொடங்கி, சிறுநீரகங்களால் அவற்றை வடிகட்ட முடியாமல் போனால், யூரிக் அமிலம் படிக வடிவில் குவியத் தொடங்குகின்றது. இதன் காரணமாக மூட்டுகளில் தாங்க முடியாத வலி ஏற்படத் தொடங்குகிறது. உடலில் யூரிக் அமிலம் அதிகமாக உற்பத்தியாகும்போது, பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இது சில சமயம் கடுமையான ஆபத்துகளை விளைவிக்கக்கூடும். உடலில் யூரிக் அமில அளவு அதிகரிப்பதால், கீல்வாதம், மூட்டு வலி, சிறுநீரக கற்கள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
சில இயற்கையான வழிகளில் யூரிக் அமிக அளவை கட்டுப்படுத்தலாம். இதற்கு தினசரி டயட்டில் சில உணவுகளை சேர்த்துக்கொள்வது நன்மை பயக்கும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
யூரிக் அமில அளவை குறைக்க உணவில் சிறப்பு கவனம் தேவை:
யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைக்க, உங்கள் உணவில் குறைந்த பியூரின் உணவுகளைச் சேர்க்க வேண்டும். தயிர் மற்றும் பால் போன்ற குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களை உட்கொள்வது நன்மை பயக்கும். இவை யூரிக் அமில அளவை குறைக்க பெரிய அளவில் உதவுகின்றன. சிவப்பு இறைச்சி, கடல் உணவுகள் மற்றும் உறுப்பு இறைச்சிகள் போன்ற அதிக பியூரின் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். இதுமட்டுமின்றி, மதுபானம் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள பானங்களை உட்கொள்வதை குறைக்க வேண்டும். தினமும் சமச்சீர் உணவை உட்கொள்வது யூரிக் அமில அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க உங்கள் உணவில் இந்த விஷயங்களைச் சேர்க்கலாம்:
கிரீன் டீ: க்ரீன் டீயில் உள்ள கேடசின்கள் சக்திவாய்ந்த ஆண்டி-ஆக்சிடெண்டுகளாக உள்ளன.
உடலில் சில நொதிகளின் உற்பத்தியை மெதுவாக்க கேடசின்கள் பயன்படுத்தப்படுகின்றன. யூரிக் அமில அளவைக் குறைக்க இது மிகவும் உதவியாக இருக்கும்.
மேலும் படிக்க | தொப்பை கரைய... கொழுப்பை எரிக்க... நீங்கள் கடைபிடிக்க வேண்டிய 10 கட்டளைகள்
நார்ச்சத்து: உணவில் போதுமான அளவில் நார்ச்சத்து சேர்த்துக்கொள்வது யூரிக் அமில அளவைக் குறைக்க உதவியாக இருக்கும். ஓட்ஸ், முழு தானியங்கள், ப்ரோக்கோலி, பூசணிக்காய் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இந்த உணவுகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவை உடலில் யூரிக் அமிலத்தை உறிஞ்சி அவற்றை அகற்ற உதவுகிறது.
வைட்டமின் சி: யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைக்க, வைட்டமின் சி நிறைந்த பழங்களை தினமும் சாப்பிடலாம். இவை யூரிக் அமில அளவை வேகமாக குறைக்க உதவுகின்றன. உங்கள் தினசரி உணவில் கிவி, ஆரஞ்சு, நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.
தண்ணீர்: தண்ணீர் உடலில் உள்ள நச்சுகளை நீக்கும் ஒரு இயற்கையான திரவமாகும். இது உடலில் உள்ள கழிவுகளை சுத்தப்படுத்துகின்றது. தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது மிக அவசியம். இது யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைப்பதோடு, எடை குறைக்கவும், நச்சுகளை நீக்கவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தூக்கத்தில் மாரடைப்பு ஏற்பட காரணம் என்ன? இதற்கான அறிகுறிகள் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ