அன்றாட உணவில் நாம் தயிர் அதிகம் சேர்த்துக் கொண்டால், இதய நோய் பாதிப்பு வராது என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாதாரணமாக வெயில் காலத்தில் உணவு செரிமானமாவதில் சிக்கலிருக்கும். தயிர்சாதம் சாப்பிட்டால் அது மந்தத்தை ஏற்படுத்தி, செரிமானக் கோளாறை இன்னும் அதிகப்படுத்திவிடும். அதனால் உடலில் சூடு அதிகமாகிவிடும். வெயில் காலத்தில் உடல் குளிர்ச்சிக்குத் தயிரைவிட மோரைச் சேர்த்துக்கொள்வது நல்லது.


தயிரினால் ஏற்படும் நன்மைகள் குறித்து அமெரிக்காவிலுள்ள பாஸ்டன் மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில், ஆய்வுக் குழுவின் துணை தலைவர் ஜஸ்டின் ஆர்.பியுன்டியா கூறுகையில், ‘நார்ச்சத்து நிறைந்த காய்கறி, பழங்கள், முழு தானியங்கள் ஆகியவற்றுடன் சேர்த்து தயிரை எடுத்துக் கொண்டாலும் சரி அல்லது தனியாக எடுத்தாலும் சரி இதயம் ஆரோக்கியமாக இயங்கும் என ஆய்வில்  தெரியவந்தது’ என்றார்.


ஆய்வில் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட 30 முதல் 55 வயதுக்குள்பட்ட 50,000 பெண்களும், 40 முதல் 75 வயதுக்குள்பட்ட 18,000 ஆண்களும் பங்கேற்றனர்.


இந்த ஆய்வின் முடிவுகள் அமெரிக்க உயர் ரத்த அழுத்த சிகிச்சைக்கான மருத்துவ இதழில் வெளியாகின. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஆய்வில் பங்கேற்ற அனைவரும் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அவர்களில் ஒரு குழுவுக்கு, தினமும் தயிர் வழங்கப்பட்டது. அடுத்த குழுவுக்கு அவ்வப்போது மட்டும் தயிர் வழங்கப்பட்டது.


இந்நிலையில், தினமும் தயிர் சாப்பிட்ட குழுவினரிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபோது அவர்களுக்கு இதய நோய், பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு 20 சதவீதம்  குறைவாக இருந்தது தெரியவந்தது.