Zika Virus: இந்தியாவில் அதிகரிக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு! புனேயில் மோசமாகும் நிலைமை
Zika Virus Outbreak In Pune: புனேவில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மேலும் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளதான சந்தேகத்தில் கண்காணிப்பு தீவிரம்...
புனே: ஜிகா வைரஸ் வழக்குகளின் அதிகரிப்புடன் புனே போராடி வருகிறது, கடந்த வாரத்தில் ஆறு புதிய சந்தேகத்திற்கிடமான வழக்குகள் பதிவாகியுள்ளன. புனே முனிசிபல் கார்ப்பரேஷன் (Pune Municipal Corporation (PMC) ) வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை களை துரிதப்படுத்தியுள்ளது, கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னதாக புனேவில் ஐந்து பேருக்கு ஜிகா வைரஸால் காய்ச்சல் ஏற்பட்டதுடன் தற்போதைய 6 வழக்குகளையும் சேர்த்தால், புனேவில் ஜிகா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 11 ஆக உயர்ந்துவிட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று சாத்தியமான வழக்குகளைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணியில் சுகாதாரப் பணியாளர்களை புனே மாநகராட்சி ஈடுபடுத்தியுள்ளது.
ஜிகா வைரஸை பரப்பும் ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் காணப்படும் பகுதிகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்க ஃபோகிங் இயந்திரங்கள் பயன்படுத்தியுள்ளது.
புனேவில் முதல் ஜிகா வழக்கு நவம்பர் 16 அன்று, பிம்ப்ரி-சின்ச்வாடில் கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 64 வயது பெண்ணுக்கு ஏற்பட்டது. அந்தப் பெண்ணுக்கு காய்ச்சல் மற்றும் உடல்வலியின் அறிகுறிகள் தென்பட்டதால், புனேயில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு, ஜிகா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மேலும் படிக்க | மூட்டு வலி பாடாய் படுத்துதா? விரட்டி அடிக்க சில எளிய டிப்ஸ் இதோ
அதனையடுத்து, நோயாளி கலந்து கொண்ட கலாச்சார நிகழ்ச்சியைப் பற்றி விசாரித்த வகையில், கேரளாவில் இருந்து தனிநபர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தெரியவந்துள்ளது. இது வைரஸ் பரவுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரித்துள்ளது.
ஜிகா வைரஸ் தொடர்பாக PMC இன் உதவி சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு அதிகாரி டாக்டர் சூர்யகாந்த் தியோகர் தகவல் தெரிவித்தார். "சாத்தியமான அறிகுறிகளைக் கண்டறிவதற்கும், காய்ச்சல் அல்லது ஜிகா நோய்த்தொற்றின் அறிகுறிகளை வெளிப்படுத்தும் நபர்களைச் சோதிப்பதற்கும், வழக்கமான சோதனைகளுக்கான விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும் தீவிரமாக ஆய்வுகளை நடத்தி வருகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.
பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், காய்ச்சல் அறிகுறிகளுக்கு மருத்துவ உதவியை நாடுமாறும் டாக்டர் சூர்யகாந்த் தியோகர் அறிவுறுத்தினார். எரவாடா பகுதியில் 3,000 வீடுகளுக்குச் சென்று காய்ச்சல் நோயாளிகளைப் பரிசோதிக்கவும், ஏடிஸ் கொசுவின் இனப்பெருக்க மூலங்களை அகற்றவும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
மேலும் படிக்க | உயிரற்ற நரம்புகளுக்கும் உயிர் கொடுக்கும் ‘மேஜிக்’ மசாலா!
ஜிகா வைரஸ்
ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ், முதலில் காய்ச்சலை ஏற்படுத்துகிறது.டெங்கு, சிக்குன்குனியா மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்றவற்றையும் பரப்பும் கொசுக்களால் ஏற்படும் மற்றுமொரு நோய் இது. இரத்த பரிசோதனை அல்லது மற்ற உடல் திரவங்களை உள்ளடக்கிய சோதனைகள் மூலம் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்படுகிறது. ஜிகா வைரஸுக்கு குறிப்பிட்ட சிகிச்சையோ தடுப்பூசியோ இல்லை என்பதால், கவனமாக இருக்க வேண்டும்.
ஜிகா வைரஸின் அறிகுறிகள்
சொறி, காய்ச்சல், வெண்படல அழற்சி, தசை மற்றும் மூட்டு வலி, உடல்நலக்குறைவு மற்றும் தலைவலி ஆகியவை ஜிகா வைரஸ் பாதிப்பின் பொதுவான அறிகுறிகளாகும். பொதுவாக 2 முதல் 7 நாட்களுக்கு நீடிக்கும் இந்த அறிகுறிகள் அனைத்துமே ஜிகா வைரஸ் உள்ள அனைவருக்கும் ஏற்படுவதில்லை.
மேலும் படிக்க | அல்சைமர் முதல் மூட்டு வலி வரை... தினமும் ‘இஞ்சி’ கட்டாயம் தேவை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ