ஜெனீவா: கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்து வரும் ஆக்கப்பூர்வமான செய்திகளை ஊக்குவித்த போதிலும், பல்வேறு நாடுகளில், குறிப்பாக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் COVID-19 தொற்று அதிகரித்து வருவது குறித்து உலக சுகாதார நிறுவனம் (WHO) கவலை கொண்டுள்ளது என்று இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் திங்களன்று தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்க நிறுவனமான மாடர்னா, COVID-19 க்கு எதிரான அதன் எம்ஆர்என்ஏ அடிப்படையிலான தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் 94.5 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தது.


COVID-19 ஐத் தடுப்பதில் அவர்களின் தடுப்பு மருந்து 90 சதவீதத்திற்கும் அதிகமாக திறன்படைத்தாக இருக்கின்றன என Pfizer மற்றும் BioNTech அறிவித்ததைத் தொடர்ந்து மாடர்னாவின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.


ALSO READ: Today COVID-19 in Tamil Nadu: இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்!


"COVID-19 தடுப்பு மருந்துகளைப் பற்றிய ஊக்கமளிக்கும் செய்திகளை நாங்கள் தொடர்ந்து பெற்று வருகிறோம். மேலும் வரும் வாரங்களில் புதிய கருவிகள் வரத் தொடங்கும் சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கையுடனும் நம்பிக்கையுடன் இருக்கிறோம்." 


"எனினும் சில நாடுகளில் தொற்றின் வீரியம் மீண்டு அதிகமாகி இருப்பதை நாங்கள் காண்கிறோம். இது மிகவும் கவலை அளிக்கிறது. குறிப்பாக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் நிலைமை மீண்டும் மோசமடைந்து வருகிறது. சுகாதார ஊழியர்கள் மற்றும் சுகாதார அமைப்புகள் உச்சகட்ட நிலைக்கு தள்ளப்படுகின்றன.” என்று டெட்ரோஸ் கூறினார்.


உலகளவில் மொத்தம் 54.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதில் 1.3 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் அடங்கும் என்றும் WHO உறுதிப்படுத்தியுள்ளது.


ALSO READ: Shocking: கொரோனா தொற்றால் காது கேளாமல் போகலாம்: லண்டன் ஆய்வு


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR