Shocking: கொரோனா தொற்றால் காது கேளாமல் போகலாம்: லண்டன் ஆய்வு

இதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றும், காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுக்குப் பிறகும் இதே போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்றும் வல்லுநர்கள் கூறினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 14, 2020, 04:17 PM IST
  • கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, சில நோயாளிகளுக்கு நிரந்தர காது கேளா பிரச்சினை வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • காதுகளில் பிரச்சனை ஏற்படுபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
  • தொற்றால் காதுகளில் ஏற்படும் பிரச்சனை குறித்து மேலும் ஆராய்ச்சி தேவைப்படுகிறது – ஆய்வு.
Shocking: கொரோனா தொற்றால் காது கேளாமல் போகலாம்: லண்டன் ஆய்வு title=

லண்டன்: கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றுநோய் காரணமாக, சில நோயாளிகளுக்கு நிரந்தர காது கேளா பிரச்சினை வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக காதுகளில் பிரச்சனை ஏற்படுபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தின் லண்டன் பல்கலைக்கழக கல்லூரி வல்லுநர்கள் உள்ளிட்ட விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த நோய்த்தொற்று காரணமாக காது கேளாமை (Hearing Loss) ஏற்படுகிறது என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமானது. ஏனெனில் ஸ்டெராய்டுகள் மூலம் முறையான சிகிச்சை எடுத்தால் இந்த சிக்கலை சமாளிக்க முடியும்.

இதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றும், காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுக்குப் பிறகும் இதே போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்றும் வல்லுநர்கள் கூறினார்.

ALSO READ: COVID-19 Vaccine இந்தியாவில் யாருக்கு முதலில் கிடைக்கும்? விவரங்களை அளித்தது மத்திய அரசு

'பி.எம்.ஜே கேஸ் ரிப்போர்ட்ஸ்’ இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியில் ஆஸ்துமா நோயாளியாக இருக்கும் 45 வயது மனிதர் ஒருவர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்ட பின்னர், அவரது செவிப்புலன் திறன் திடீரென பறிபோனது.

இந்த நபருக்கு நோய்த்தொற்றுக்கு முன்னர் காதுகள் தொடர்பான எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. அந்த நபருக்கு ஸ்டெராய்டு மாத்திரைகள் மற்றும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. அதன் பிறகு அவரது காது கேளும் திறன் ஓரளவு திரும்பியுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வில், 'அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், தொற்றால் காதுகளில் ஏற்படும் பிரச்சனை குறித்து மேலும் ஆராய்ச்சி தேவைப்படுகிறது. ஆராய்ச்சிகள் மூலம்தான் இந்த பிரச்சனையின் மூலம் கண்டறியப்பட்டு அதற்கான நிவாரணத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியும்.' என்று கூறியுள்ளனர்.

ALSO READ: Good News: Iodine based sanitiser-களை வெளியிடப்போகும் உலகின் முதல் நாடாகப்போகிறது இந்தியா

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News