Health Alert: பழங்களுடன் இவற்றை சேர்த்து சாப்பிடாதீர்கள்: உணவு விஷமாய் மாறும்
Health Alert: சில பழங்களையும் உணவுகளையும் சேர்த்து சாப்பிட்டால் அது விஷமாக மாறிவிடும் என்பது உங்களுக்கு தெரியுமா? விஷமாக மாறும் உணவு சேர்க்கைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உணவை நச்சாக மாற்றும் உணவு சேர்க்கைகள்: பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஆரோக்கியமாக இருக்க, பழங்களை சாப்பிட வேண்டும். பழங்களை உட்கொள்வதன் மூலம், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். அவை ஃபிளாவனாய்டுகள் உட்பட அனைத்து வகையான ஆண்டி ஆக்சிடெண்டுகளையும் கொண்டிருக்கின்றன.
தினமும் பழங்களை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது இதயம், சர்க்கரை நோய், வயிறு, புற்றுநோய், வீக்கம் போன்ற பிரச்சனைகளைக் குறைக்கிறது. இருப்பினும், பழங்களை உண்ணும் போது, சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒன்றாக சாப்பிட்டால் தீங்கு விளைவிக்கும் பல பழங்கள் உள்ளன. இது தவிர, சில உணவு வகைகளை ஒன்றாகச் சாப்பிடுவதால், அது உடலில் விஷமாக மாறத் தொடங்கும். இவற்றை ஒன்றாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஒன்றாகச் சாப்பிடக்கூடாத 4 உணவுகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேலும் படிக்க | காது வலி பாடாய் படுத்துதா: இப்படி செஞ்சி பாருங்க, நிவாரணம் கிடைக்கும்
இதனால் ஏற்படும் இழப்பு என்ன
பல நேரங்களில் பழங்களுடன் சில பொருட்களை சேர்த்து உட்கொள்வதால், உணவின் கலவை தவறாகி, உடலில் விஷம் உருவாகத் தொடங்குகிறது. இத்தகைய உணவு சேர்க்கைகளை உட்கொள்பதால், ஒவ்வாமை, தோல் வெடிப்பு, உணவில் விஷத்தன்மை போன்றவையும் ஏற்படலாம்.
பழங்களுடன் இவற்றைச் சாப்பிடக் கூடாது
கொய்யா மற்றும் வாழைப்பழம்:
சிலர் பல பழங்களை ஒன்றாக சாப்பிடுவார்கள். சிலர் பழ சாட் சாப்பிட விரும்புகிறார்கள். இதில், கொய்யா மற்றும் வாழைப்பழம் ஒன்றாக கலக்கப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு பழங்களையும் சேர்த்து சாப்பிடுவதால் குமட்டல், வயிற்று உப்புசம், தலைவலி மற்றும் அமில வீச்சு போன்றவை ஏற்படும்.
அன்னாசி மற்றும் பால்:
பாலுடன் அன்னாசிப்பழம் கலந்து சாப்பிடக் கூடாது. இந்த கலவையால் வயிற்று வலி, வாந்தி மற்றும் வீக்கம் ஏற்படலாம். அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன் என்ற கலவை உள்ளது. இது பாலுடன் கலக்கும்போது தீங்கு விளைவிக்கும் அபாயம் உள்ளது.
பப்பாளி மற்றும் எலுமிச்சை:
சிலர் எலுமிச்சை மற்றும் பப்பாளியில் உப்பு சேர்த்து சாப்பிடுகிறார்கள். இது சுவையை அதிகரிகலாம். ஆனால், இவற்றின் சேர்க்கை உடலுக்கு விஷத்தன்மையை அளிக்கலாம். பப்பாளியுடன் எலுமிச்சையை சாப்பிட்டால், ஹீமோகுளோபின் அளவு குறையும். இது தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது.
தண்ணீருடன் தர்பூசணி:
சிலர் தர்பூசணி சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கிறார்கள். அல்லது தர்பூசணி ஸ்மூத்தி செய்து குடிக்கிறார்கள். இப்படி செய்வதால் செரிமான பிரச்சனைகள் அதிகரிக்கும். இது செரிமான செயல்முறையை மெதுவாக்குகிறது. இது வீக்கம் மற்றும் அமிலத்தன்மையை அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இரவு நேரத்தில் இந்த உணவையெல்லாம் தவிர்த்துவிடுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR