தர்பூசணி: கோடைக்காலத்தில் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை மக்கள் அடிக்கடி வாங்கி உட்கொள்வது வழக்கம். இது உடல் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது. கோடையில் மிகவும் விரும்பப்படும் பழங்களில் தர்பூசனியின் பெயர் முதலில் வருகிறது.
தர்பூசணியில் 92 சதவீதம் தண்ணீர் உள்ளது. இது கோடையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புரதம், வைட்டமின்கள், நார்ச்சத்து போன்ற பல சத்தான கூறுகள் இதில் உள்ளன. இதில் உள்ள நார்ச்சத்து பசியைக் கட்டுப்படுத்துவதால் உடல் எடையைக் குறைக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும்.
ஆனால் பெரும்பாலானவர்கள் தர்பூசனி பழத்தை வாங்கிய பிறகு அதை வெட்டி ஃப்ரிட்ஜில் வைக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். ஆனால் தர்பூசணியை ஃப்ரிட்ஜில் வைப்பதால் உடலுக்கு பல பிரச்சனைகள் வரும் என்பது உங்களுக்குத் தெரியுமா? தர்பூசணியை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
தர்பூசணியை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
ஊட்டச்சத்து கூறு குறைகிறது
தர்பூசணியின் வெளிப்புறப் பகுதி (தோல்) மிகவும் தடிமனாக இருப்பதால், அது விரைவில் கெட்டுப் போகாது. ஆகையால் தர்பூசணியை குளிர்சாதனப்பெட்டியின் உள்ளே வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை சுமார் 15-20 நாட்கள் வரை வெளியே வைத்திருக்கலாம்.
மேலும் படிக்க | டயட்ல இருக்கீங்களா: இவைதான் டயட்டிங்கின் பக்க விளைவுகள், ஜாக்கிரதை
அப்படி தர்பூசணியை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டுமென்றால், அதை வெட்டாமல் அப்படியே முழுவதுமாக வைக்கலாம். எப்போதும், தர்பூசணியை வெட்டி வைக்க வேண்டாம். குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படும் தர்பூசணியில் உள்ள ஊட்டச்சத்து குறைகிறது. மேலும் அதில் காணப்படும் கரோட்டினாய்டு அளவும் குறைகிறது.
குளிர்ந்த தர்பூசணி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
தர்பூசணி கோடையில் நிவாரணம் தரும் நீர்ச்சத்து நிறைந்த பழம். ஆனால் இதை ஃப்ரிட்ஜில் வைத்தால் அதன் சத்து குறைகிறது. அதே போல் குளிர்ந்த தர்பூசணி சாப்பிடுவதால் இருமல் மற்றும் சளி வர வாய்ப்பு உள்ளது.
இதனுடன், வெட்டி வைத்த தர்பூசணியை ஃபிரிட்ஜில் வைத்து, அதை நீண்ட நேரம் கழித்து சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை அதிகரித்து, ஃபுட் பாய்சனிங் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகரிகின்றன. இதனால், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. ஆகையால், எப்போதும் புதிய பிரஷ்ஷான தர்பூசணியையே சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதாகும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Salad Dressings: கோடையை சுவையானதாக்கும் ஆரோக்கியமான இந்திய சாலட்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR