இந்த உணவுகளால் இளம் வயதிலும் இரத்த அழுத்தம் அதிகரிக்கலாம்! ஜாக்கிரதை!
High Blood Pressure: தினசரி உணவு, வாழ்க்கை முறை, உடல் பருமன், மன அழுத்தம், நாட்பட்ட நோய்கள், மருந்துகள் ஆகியவற்றால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதனை ஆரம்பத்திலேயே சரி செய்ய வேண்டியது அவசியம்.
High Blood Pressure: உயர் இரத்த அழுத்தம் எனப்படும் மிகவும் ஆபத்தான ஒரு வியாதி ஆகும். பல நேரங்களில் நம்மால் அதனை நேரடியாக உணர முடியாது. ஆனால் உங்கள் உடலில் உயர் இரத்த அழுத்தம் இருந்தால் பல கடுமையான நோய்களை சந்திக்க நேரிடும். பொதுவாக உடலில் இரத்த அழுத்தம் நாள் முழுவதும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். உடல் ஓய்வாக இருக்கும் போது அதன் அளவு குறைவாகவும், செயல்பாட்டில் இருக்கும் போது அதிகமாகவும் இருக்கும். மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் உற்சாகமாக இருக்கும் போது அல்லது உடற்பயிற்சி செய்யும் போது இதன் அளவு அதிகரிக்கிறது. உயர் இரத்த அழுத்தம் அதிகமானால் அது இரத்த நாளங்களை சேதப்படுத்தி, விறைப்பாகவோ அல்லது பலவீனமடைய செய்யும்.
மேலும் படிக்க | ஓமத்தை ‘இப்படி’ சாப்பிட்டா... யூரிக் அமில பிரச்சனைக்கு முடிவு கட்டலாம்..!!
இதன் காரணமாக திடீரென மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயமும் அதிகம். மேலும் இதயம் செயலிழப்பு, கண் பார்வை பிரச்சினைகள், சிறுநீரக பிரச்சினைகள், புற தமனி நோய், கால்களில் வலி போன்ற பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்க செய்யும். இதுதவிர, உயர் இரத்த அழுத்தம் உடலின் எலும்புகளை வலுவிழக்கச் செய்து, ஆண்களுக்கு அதிக விறைப்புத்தன்மையையும் உண்டாக்கும். அடிக்கடி புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால், உடல் எடை அதிகமாக இருந்தாலே, சத்தான உணவுகளை எடுத்து கொள்ளாமல் இருந்தால், உடல் எடை அதிகமாக இருந்தால், அதிகமாக மது அருந்தினால், மன அழுத்தம் அதிகமாக இருந்தால், நாள் முழுக்க உடல் செயல்பாடு இல்லை என்றால் உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
உயர் இரத்த அழுத்தத்தை எப்படி தடுப்பது?
ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்கள் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, எதிர்த்து போராட உதவுகிறது. உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அதன் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். இரத்த அழுத்தம் அதிகரிக்க பொதுவான காரணங்களில் ஒன்று உடல் எடை அதிகரிப்பு ஆகும். குறிப்பாக உங்கள் சேரும் அதிகப்படியான கொழுப்புகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களின் சமநிலையை மாற்றுகிறது. எனவே இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உடல் எடையைக் குறைக்க வேண்டியது அவசியம். மேலும் உடல் எடையை குறைக்கவும், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். சிறிதளவு மது கூட தமனிகளில் அதிக பாதிப்பை ஏற்படுகிறது.
உடற்பயிற்சி மற்றும் உணவு
உடலுக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். உடல் செயல்பாடுகள் அனைத்து உறுப்புகளையும் செயலில் வைத்திருக்க உதவுகின்றன. உங்கள் உடலில் ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம் இருந்தால், வழக்கமான உடற்பயிற்சி செய்து அவசியம். கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் கொண்ட உணவுகள், பால் பொருட்கள் போன்றவை உடல் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே இவற்றை அதிகமாக எடுத்து கொள்ளுங்கள். அதே சமயம் இறைச்சி, வெண்ணெய் மற்றும் அதிக கொழுப்புள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டாம். அவற்றை சாப்பிடும் போது இரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். மேலும் புகைபிடித்தல் உடலுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
மேலும் படிக்க | முகக் கொழுப்பை குறைக்க... என்ன சாப்பிடலாம்...? என்ன சாப்பிடக்கூடாது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ