உடலில் மரபணு மாற்றம் ஏற்பட்டு செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளர்ச்சி அடையும்போது புற்றுநோய் உருவாகிறது, செல்களின் அபரிமிதமான வளர்ச்சியினால் கட்டிகள் உருவாகிறது.  புற்றுநோய் செல்கள் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவி உடலின் பல்வேறு பாகங்களில் புற்றுநோய் ஏற்படுகிறது.  இதில் வாய் புற்றுநோய் தற்போது அதிகரித்து வருகிறது, வாய் புற்றுநோய் ஸ்குவாமஸ் செல் கார்சினோமா என்று அழைக்கப்படுகிறது, இது 90% வீரியமாக காணப்படுகிறது.  வாய் புற்றுநோய் பிரச்சனை ஏற்பட்டால் வாய் மற்றும் உதடுகளின் உட்புறத்தை எல்லையாகக் கொண்ட செதிள் உயிரணுக்களில் தொடங்குகின்றன. கன்னங்கள் மற்றும் ஈறுகளின் உட்புறம் உட்பட வாயின் எந்தப் பகுதியிலும் வாய் புற்றுநோய் உருவாகலாம். இது அடிக்கடி வாய்வழி அல்லது ஓரோபார்னீஜியல் புற்றுநோயாக வகைப்படுத்தப்படுகிறது.  ஓரோபார்னீஜியல் புற்றுநோய் வாயின் பின்புறம் மற்றும் தொண்டைப் பகுதியை பாதிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க சூப்பர் வழி: இந்த டயட் சார்ட் ஃபாலோ பண்ணுங்க போதும் 


வாய் புற்றுநோயுடன் தொடர்புடைய 114 மரபணு மாறுபாடுகளை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.  பெண்களுடன் ஒப்பிடுகையில் 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. வாய்வழி லைக்கன் பிளானஸ் சிவப்பு நிற விளிம்புடன் கூடிய வெள்ளைக் கோடுகளால் வகைப்படுத்தப்படுகிறது.  வாய் அல்லது நாக்கின் உட்புறத்தில் உள்ள திட்டுகள், சிவப்பு அல்லது வெள்ளை நிறத்தில் ரத்தப்போக்கு அல்லது உணர்வின்மை ஏற்படும்.  ஈறுகள் அல்லது வாய் புறணியில் வீக்கம் அல்லது குணமடையாத வாய் புண்கள், தளர்வான பற்கள், சரியாகப் பொருந்தாத பற்கள், தாடை வீக்கம், தொண்டை வலி அல்லது தொண்டையில் ஏதோ அடைத்திருப்பது போன்ற உணர்வு, கரகரப்பான குரல், மெல்லுவதில் அல்லது விழுங்குவதில் சிரமம், நாக்கு அல்லது தாடையை அசைப்பதில் சிரமம் ஏற்படும்.


உங்கள் வாயில் உள்ள உயிரணுக்களில் உள்ள டிஎன்ஏ பாதிக்கப்படும்போது வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. இருப்பினும் உங்கள் உணவுப் பழக்கம் போன்ற சில காரணிகள் வாய் புற்றுநோய் ஏற்பட காரணங்களாக இருக்கலாம்.  புகைபிடிப்பது அல்லது புகையிலை பொருட்களை உபயோகிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற பழக்கங்களை கட்டுப்படுத்த வேண்டும்.  சூரிய ஒளியில் இருக்கும் போது, ​​உங்கள் தோலிலும், உதடுகளிலும் சன் ஸ்க்ரீன் லோஷன்களை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.


மேலும் படிக்க | PCOS and Diabetes: பிசிஓஎஸ் பிரச்சனை இருந்தால் சர்க்கரை நோய் வருமா? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ