முளை கட்டிய பயறு: வெறும் வயிற்றில் நீங்கள் உட்கொள்ளும் முதல் உணவு இதுவாக இருக்கட்டும்!!
Health News: காலையில் வெறும் வயிற்றில் சத்துக்கள் நிறைந்த முளை கட்டிய பயறு அல்லது முளை கட்டிய தானியங்களை சாப்பிட்டு வந்தால், அதனால் பல நன்மைகள் கிடைக்கும்.
முளை கட்டிய தானியங்களை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை தருகின்றது. காலையில் வெறும் வயிற்றில் சத்துக்கள் நிறைந்த முளை கட்டிய பயறு அல்லது முளை கட்டிய தானியங்களை சாப்பிட்டு வந்தால், அதனால் பல நன்மைகள் கிடைக்கும்.
புரதம், நார்ச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, தாது, ஆன்டி-ஆக்ஸிடன்ட், தாமிரம், வைட்டமின் ஏ, பி, வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்ற கூறுகள் முளை கட்டிய பயறில் உள்ளன. இதில் கொழுப்பின் அளவும் மிகக் குறைவாக உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும்
நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த முளை கட்டிய தானியங்களை (Sprouts) உட்கொள்ளலாம். முளை கட்டிய தானியங்களில் உள்ள சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது உங்களை நோய்களில் இருந்து காப்பாற்றும்.
வயிற்று பிரச்சனைகளுக்கு நிவாரணம்
வயிறு சம்பந்தமான (Stomach Problems) பிரச்சனைகளில் முளை கட்டிய பயறை உட்கொள்வதும் நன்மை தரும். பயறில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்து வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது.
இதய ஆரோக்கியத்திற்கு நல்லது
முளை கட்டிய பயறை உட்கொள்வது இதயத்திற்கும் நன்மை பயக்கும். இதனால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இதில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இதயம் தொடர்பான பல பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாத்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.
ALSO READ | Migraine: உணவே மருந்து; ஒற்றை தலைவலிக்கு தீர்வாகும் உணவுகள்!
எடை இழப்புக்கு உதவும்
உடல் எடையைக் குறைக்க (Weight Loss), முளை கட்டிய பயறை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளலாம். முளை கட்டிய பயறில் மிகக் குறைந்த அளவு கொழுப்பு உள்லது. இது எடையைக் குறைக்க உதவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ | கேரட் ஆரோக்கியம்தான்... ஆனாலும் பக்க விளைவுகள் உள்ளன
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR