ஒற்றைத் தலைவலி என்பது மிகவும் பொதுவான தலைவலி வகைகளில் ஒன்றாகும். நரம்பியல் பிரச்சினை இதற்கு முக்கிய காரணம் என கூறப்படும் நிலையில், ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு, தலைவலியுடம் கூடவே, வாந்தியும், சத்தம் அல்லது வெளிச்சத்தை தாங்க இயலாத உணர்வு ஆகியவை ஏற்படும்.
ஒற்றைத் தலைவலி என்பது பல மணிநேரங்கள் முதல் பல நாட்கள் வரை நீடித்து அன்றாட வாழ்க்கை பணிகளை பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஒற்றைத் தலைவலிக்கு ஒரே தீர்வு ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சரியான நேரத்தில் மருந்துகளை எடுத்து கொள்வது தான். ஒற்றைத் தலைவலியை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியம். சில உணவுகள் ஒற்றை தலைவலியை கட்டுப்படுத்துவதில் மிகவும் சிறந்தவை.
1. தயிர்:
பல நேரங்களில் ஒற்றைத் தலைவலி ஏற்பட வயிறு தொடர்பான பிரச்சனை, நீரிழப்பு ஆகியவை முக்கிய காரணமாக அமைகிறது. அந்த வகையில், தயிரை உனவில் வழக்கமாக சேர்த்துக் கொள்வது, செரிமானம் போன்ற வயிற்றுப் பிரச்சினைகளை நீக்குவதோடு, நீரிழப்பைக் கட்டுப்படுத்தி தலைவலி ஏற்படும் வாய்ப்பு பெரிதும் குறைம்கிறது.
2. மூலிகை தேநீர்:
உடலுக்கு நீர்சத்து கொடுத்து, வயிற்று பிரச்சனையையும் போக்கும் மற்றொரு முக்கிய பானம் மூலிகை தேநீர். இஞ்சி டீ, புதினா டீ ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது. ஒற்றைத் தலைவலி வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும் இது கூடவே பல நன்மை பயக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. உதாரணமாக, புதினா இலை சேர்த்த தேநீர் சைனஸ் அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இஞ்சி டீ செரிமானத்தை மேம்படுத்துகிறது.
ALSO READ | Red Wine Vs Corona Virus: ஒயின் பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி!
3. மெக்னீசியம் நிறைந்த உணவுகள்
ஆளி விதைகள், சியா விதைகள் மற்றும் முந்திரி போன்றவை மெக்னீசியம் நிறைந்தவை. மெக்னீசியம் நிறைந்த உணவு ஒற்றைத் தலைவலியைக் குறைக்க உதவுகிறது என நம்பப்படுகிறது. எனவே இவற்றை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், ஒற்றைத் தலைவலி பிரச்சனை படிப்படியாக குறையும்.
4. ஒமேகா 3 நிறைந்த உணவுகள்
கடல் மீனில் போதுமான அளவு ஒமேகா 3 உள்ளதால், உடலில் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. கடல் உணவில், குறிப்பாக மீன் உணவில் புரதம் மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்துள்ள நிலையில், இது ஒற்றை தலைவலியைக் கட்டுப்படுத்த மிகவும் உதவும்.
ALSO READ | Paneer: பன்னீரை சமைத்து சாப்பிடுவது நல்லதா; நிபுணர்கள் கூறுவது என்ன.!!
(பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது. ZEE NEWS இதனை உறுதிபடுத்தவில்லை)
ALSO READ | Health Tips: மன அழுத்தத்தை விரட்டும் 6 பழங்கள்.!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR