சுவைக்க சுவைக்க திகட்டாத சுவையையும் நன்மையையும் அள்ளித்தரும் திராட்சை
Benefits Of Grapes: திராட்சைகளை சாப்பிடுவதன் மூலம் பல வகையான நோய்களைத் தவிர்க்கலாம். திராட்சை சத்துக்களின் களஞ்சியமாக உள்ளது.
நமது உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக்க பல வகையான பழங்களையும் காய்கறிகளையும் நாம் அதிகம் உட்கொள்ள வேண்டும். பழங்கள் ஒவ்வொன்றும் நமது உடல் ஆரோக்கியத்துக்கு பல வித நன்மைகளை செய்கின்றன.
பலருக்கு விருப்பமான திராட்சை பழங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். திராட்சை பழத்தில் பல சத்துக்கள் அடங்கியுள்ளன. திராட்சையில் ஆண்டி-ஆக்சிடெண்டுகள், வைட்டமின் டி, சர்க்கரை, மாவு சத்து என ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
திராட்சை பழத்தின் மூலம் முகம், தலை முடி மற்றும் சருமத்திற்கும் அதிக நன்மைகள் கிடைக்கின்றன. திராட்சையை உட்கொண்டால் நமது உடலுக்கு உடனடியாக தேவையான ஆற்றல் கிடைத்து, நமது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடும், வலிமையும் அதிகரிக்கும்.
கோடையில் திராட்சை பழத்தை சாப்பிடுவதன் மூலம் பல வகையான நோய்களைத் தவிர்க்கலாம். திராட்சை பழம் சத்துக்களின் களஞ்சியமாக உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. திராட்சையில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இது உடலுக்கு பல வித நன்மைகளை அளிக்கின்றது.
திராட்சையின் வகைகள்:
- பச்சை திராட்சை
- கருப்பு திராட்சை
- பன்னீர் திராட்சை
- அங்கூர் திராட்சை
- காஷ்மீர் திராட்சை
- காபூல் திராட்சை
- விதை நீக்கிய திராட்சை
திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதமான நன்மைகள்
நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திராட்சையை உட்கொள்ள வேண்டும். இது உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும். இது தவிர, இது இரும்புச்சத்துக்கான ஒரு சிறந்த மூலமாகவும் இருக்கும்.
கண்களுக்கு நன்மை பயக்கும்
திராட்சையில் வைட்டமின் ஏ ஏராளமாக உள்ளது. இது கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கண் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் திராட்சையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | ஆண்மையை அதிகரிக்கும் உலர் திராட்சை; இத்தனை நன்மைகளா
புற்று நோயிலிருந்து பாதுகாப்பை அளிக்கின்றது
குளுக்கோஸ், மெக்னீசியம் மற்றும் சிட்ரிக் அமிலம் போன்ற பல தனிமங்கள் திராட்சையில் காணப்படுகின்றன. திராட்சை முக்கியமாக காசநோய், புற்றுநோய் மற்றும் இரத்த தொற்று போன்ற நோய்களுக்கு நன்மை பயக்கும். புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களைத் தடுக்கவும் திராட்சை உதவுகிறது.
மார்பக புற்றுநோயைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும்
திராட்சை சாப்பிடுவது இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை பயக்கும். ஒரு ஆராய்ச்சியின் படி, திராட்சை சாப்பிடுவது மார்பக புற்றுநோயைத் தடுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
கொலஸ்ட்ராலை குறைக்கிறது
திராட்சை பழத்தை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கலாம். நமது உடலின் செயல்பாடுகளை சீராக்க திராட்சை உதவுகிறது.
கூந்தல் வளர்ச்சியில் உதவியாக இருக்கும்
திராட்சை பழத்தில் லிவோலியிக் அமிலம் உள்ளது. இந்த அமிலம் மயிர்கால்களை முடியின் வேர்ப்பகுதியில் இருந்து முடியை வலிமையாக்குகிறது. ஆகையால் திராட்சை சாப்பிட்டால், கூந்தல் உதிர்வதையும் தடுக்கலாம்.
ஒவ்வாமையை நீக்குகிறது
சிலருக்கு தோல் அலர்ஜி பிரச்சனை இருக்கும். திராட்சையில் அதிக ஆன்டிவைரல் பண்புகள் காணப்படுகின்றன. இது தோல் தொடர்பான ஒவ்வாமைகளை அகற்ற உதவுகிறது. ஆன்டிவைரல் பண்புகள் போலியோ, வைரஸ் மற்றும் ஹெர்பெஸ் போன்ற வைரஸ்களை எதிர்த்துப் போராடவும் உதவியாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR