எச்சரிக்கை ! டால்கம் பவுடர் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள்

தோல் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு டால்கம் பவுடர்கள் காரணம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 23, 2022, 07:46 PM IST
  • டால்கம் பவுடர்களை பயன்படுத்துவது ஆபத்து
  • வியர்வை துளைகளை அடைப்பது உடலுக்கு நல்லதல்ல
  • புற்றுநோய் வருவதற்கும் கூட வாய்ப்புகள் அதிகமாம்
எச்சரிக்கை ! டால்கம் பவுடர் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் title=

கோடை காலத்தையொட்டி பெரும்பாலானோர்களின் வீடுகளில் டால்கம் பவுடர்களை பார்க்க முடிகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை என அனைவரும் பயன்படுத்துகின்றனர். வியர்வையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இந்த பவுடர்கள் உபயோகிக்கப்படுகின்றன. 

இந்த நேரத்தில் டால்கம் பவுடர்களின் விளம்பரங்களையும் நீங்கள் அதிகம் காண முடியும். டால்கம் என்பது தொழில்நுட்ப ரீதியாக மண்ணில் இருக்கும் ஒரு கனிமம். சுரங்கத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. பவுடராக மட்டுமல்லாமல் லிப்ஸடிக், மஸ்காரா, பிளஷ் மற்றும் ஐ ஷேடோ உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்களிலும் கலக்கப்படுகிறது.  இவைதவிர, உணவுப் பதப்படுத்துதல், மருந்துகள், சூயிங்கம், பாலிஷ் செய்யப்பட்ட அரிசி, பொம்மைகள் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த டால்கம் பவுடர் உங்களுக்கும், உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? முகப்பரு வருவதற்கு டால்கம் பவுடர் தான் காரணம்.

மேலும் படிக்க | அதிகநேரம் தூங்குவது பிடிக்குமா பாஸ் - இதை தெரிஞ்சுக்கோங்க

வியர்வை மற்றும் துர்நாற்றத்தை போக்க டால்கம் பவுடர் நம் நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நன்மைகளை விட தீமைகளே அதிகம். டால்கம் பவுடர் சருமத்தின் துளைகளை மூடுகிறது. ஆனால் மருத்துவ ரீதியாக இந்த ஓட்டைகள் திறந்தே இருக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா?. டால்க் என்பது மெக்னீசியம், சிலிக்கேட் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு வகை இரசாயனமாகும். இவை வியர்வையில் இருக்கும் சோடியத்தை உறிஞ்சுவதால் அதிகம் வியர்காது. வெப்பம் அதிகமாக இருக்கும்போது அதிகம் வியர்க்கும். வெப்பம் குறைவாக இருக்கும்போது வியர்வை குறைவாக இருக்கும். ஆனால் டால்கம் பவுடர்கள் அடித்தால், உடலின் துளைகளை மூடி வியர்வையை கட்டுப்படுத்துகின்றன. இது நல்லதல்ல. 

குழந்தைகளுக்கும் இந்த பவுடர் நல்லதல்ல என நிபுணர்கள் கூறுகின்றனர். அதனால் தான் மருத்துவர்கள் டால்கம் பவுடர்களை பரிந்துரைக்கமாட்டார்கள். குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு சோப்பு, பவுடர்கள் தேவையில்லை. வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டினால் மட்டும் போதும்.  அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ், குழந்தைகளுக்கு டால்கம் பவுடர் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. டால்கம் பவுடர் குழந்தைகளுக்கு சுவாச நோய்களை ஏற்படுத்தும் என்று அந்த அகாடமி எச்சரித்துள்ளது. ஆனால் இந்தியாவில் டால்கம் பவுடர் குழந்தைகளுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது என்பதை வேதனையான விஷயம். 

மேலும் படிக்க | இளநரை, பொடுகுப்பிரச்சனையா? இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் உதவும்

டால்கம் பவுடர் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயுக்கும் காரணம். பிறப்புறுப்பு பகுதியில் டால்கம் பவுடரைப் பயன்படுத்தும் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் டால்கம் பவுடரைப் பயன்படுத்தியதால் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக 22 பெண்கள் புகார் அளித்த வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News