Health News: திராட்சை உண்பதால் புற்றுநோயைத் தவிர்க்கலாம் தெரியுமா?

தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்வீச்சால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 10, 2021, 03:10 PM IST
  • திராட்சையை உணவில் சேர்ப்பதால், டி.என்.ஏ சேதம் குறைகிறது.
  • சூரிய ஒளியால் ஏற்படும் சேதம் தவிர்க்கப்படுகிறது.
  • சிறு வயதில் ஏற்படும் தோல் சுருக்கத்தை திராட்சை குறைக்கிறது.
Health News: திராட்சை உண்பதால் புற்றுநோயைத் தவிர்க்கலாம் தெரியுமா? title=

திராட்சை சாப்பிடுவதால் உங்கள் சருமத்தை வெயில் மற்றும் புற ஊதா (புற ஊதா) தோல் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க முடியும் என்று அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மட்டாலஜி ஜர்னலில் சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வு கூறுகிறது. எப்படி என்று யோசிக்கிறீர்களா? திராட்சையில் உள்ள இயற்கையான பாகங்களான பாலிபினால்கள் உங்களுக்கு நன்மை பயக்கும் என்று ஆய்வு கூறுகிறது.

வெயிலுக்கு அதிகப்படியான எதிர்ப்பு மற்றும் செல்லுலார் மட்டத்தில் புற ஊதா சேதத்தின் குறிப்பான்கள் குறைதல் ஆகியவற்றை ஆய்வு வெளிக்காட்டியது. "திராட்சை ஒரு இயற்கையான, உண்ணக்கூடிய சன்ஸ்கிரீனாக செயல்படக்கூடும். இது மேற்பூச்சு சன்ஸ்கிரீன் தயாரிப்புகளுக்கு மேலதிகமாக கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது" என்று அமெரிக்காவின் பர்மிங்காம் அலபாமா பல்கலைக்கழகத்தின் முன்னணி ஆராய்ச்சியாளர் கிரேக் எல்மெட்ஸ் கூறினார்.

 ஒரு நாளைக்கு 2.25 கப் திராட்சைக்கு (Grapes) சமமான முழு திராட்சைப் பொடியை உட்கொள்வதால் ஏற்படும் நன்மை குறித்து ஆய்வு ஆராய்ச்சி செய்தது. புற ஊதா ஒளியில் இருந்து ஒளிமின்னழுத்தத்திற்கு எதிராக 14 நாட்களுக்கு இந்த ஆய்வு செய்யப்பட்டது.

திராட்சைகளை இரண்டு வாரங்களுக்கு உட்கொள்வதற்கு முன்னும் பின்னும், புற ஊதா கதிர்களின் தாக்கத்தால் ஆய்வில் பங்கேற்றவர்களின் தோலில் என்ன விளைவு ஏற்பட்டுள்ளது என்பது அளவிடப்பட்டது. UV கதிர்வீச்சின் தாக்கம், எந்த அளவுகளில் எவ்வளவு பாதிப்பு, திராட்சையை உட்கொண்டதால் ஏற்பட்ட தாக்கம் என அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டன.

ALSO READ: Health News: பருப்பு வகைகளால் கூட side effects வரலாம்: பருப்பால் பலனா? பயமா?

திராட்சையை உட்கொள்வது சரும பாதுகாப்பை அதிகரித்தது என்பது முடிவுகளில் நிரூபிக்கப்பட்டது. திராட்சையை உட்கொண்ட பின்னர், தோலில் (Skin) பாதிப்பை ஏற்படுத்த வழக்கத்தை விட அதிகமான சூரிய ஒளி தேவைப்பட்டது என்பது தெரிய வந்தது. MED அதாவது Minimal Erythema Dose சராசரியாக 74.8 சதவிகிதம் அதிகரித்தது.

தோல் பயாப்ஸிகளின் பகுப்பாய்வு, திராட்சையை உணவில் சேர்ப்பதால், டி.என்.ஏ சேதம் குறைதல், தோல் செல்களின் இறப்பில் குறைபாடு, அழற்சியற்ற குறிப்பான்கள் குறைப்பு ஆகியவை ஏற்படுவதாகக் காட்டியது. இவை கவனிக்கப்பாவிட்டால், தோல் செயல்பாடு பாதிக்கப்பட்டு நாளடைவில் அது தோல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

"திராட்சை நுகர்வுடன் ஒரு குறிப்பிடத்தக்க ஒளிச்சேர்க்கை விளைவை நாங்கள் கண்டோம். அந்த நன்மை ஏற்படும் மூலக்கூறு பாதைகளை எங்களால் அடையாளம் காண முடிந்தது. டி.என்.ஏ சேதத்தை சரிசெய்து இந்த விளைவு ஏற்பட்டது என்பதை நாங்கள் அறிந்தோம்” என்றும் எல்மெட்ஸ் கூறினார்.

தோல் புற்றுநோயால் (Cancer) பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்வீச்சால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். 90 சதவிகித நான்மெலனோமா தோல் புற்றுநோய்கள் மற்றும் 86 சதவிகித மெலனோமா நோயாளிகளின் ஆய்வு இதைதான் உறுத்படுத்துகிறது.

கூடுதலாக, சிறு வயதிலேயே தோல் சுருக்கம் ஏற்படுவதற்கும் இது 90 சதவிகிதம் காரணமாக உள்ளது.

ALSO READ: Health News: உங்கள் குழந்தை Super Star ஆக ஜொலிக்க உணவில் சேருங்கள் Omega-3!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News