சிறுநீரகம் ஆரோக்கியமா இருக்கணுமா? எலுமிச்சை சாற்றை இப்படி பயன்படுத்துங்க
Kidney Detox: சிறுநீரகம் நம் உடலின் மிக முக்கியமான உறுப்பாகும். அதை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம், அது சேதமடைந்தால் அது உயிருக்கு ஆபத்தாக கூட முடியலாம்.
சிறுநீரக ஆரோக்கியத்துக்கான எலுமிச்சை பானங்கள்: சிறுநீரகம் இரத்தத்தை சுத்தப்படுத்தவும், உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும் செயல்படுகிறது. ஆனால் சில நேரங்களில் உடலில் சேரும் நச்சுகள் சிறுநீரகத்தை சேதப்படுத்தி சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்கின்றன. எனினும், தினமும் ஒரு பானத்தை குடிப்பதன் மூலம், இந்த சிறப்பு உறுப்பை சுத்தமாக வைத்து சிறுநீரக பாதிப்பை தடுக்கலாம். சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும் அந்த மேஜிக் பானம் என்ன? அதை எப்போது, எப்படி குடிக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
உடலில் சிறுநீரகத்தின் முக்கியத்துவம் என்ன?
சிறுநீரகத்தின் முக்கிய செயல்பாடு உடலில் உள்ள அழுக்கு மற்றும் திரவங்களை சிறுநீர் மூலம் வெளியேற்றுவதாகும். இது தவிர, சிறுநீரகம் மனித உடலில் உப்பு, பொட்டாசியம் மற்றும் அமிலத்தின் அளவையும் கட்டுப்படுத்துகிறது. இதனுடன், நமது உடலின் மற்ற பாகங்கள் செயல்படத் தேவையான சில ஹார்மோன்களும் சிறுநீரகங்களிலிருந்து வெளியேறுகின்றன.
எலுமிச்சை சிறுநீரகத்திற்கு நன்மை பயக்கும்
சமீபத்தில் செய்யப்பட்ட ஆய்வுகளின் அறிக்கையின்படி, தினமும் 2 எலுமிச்சை பழச்சாறு குடிப்பதால், சிறுநீர் சிட்ரேட் அதிகரித்து, சிறுநீரகத்தில் உள்ள நச்சுகள் வெளியேறும். அதே சமயம், தினமும் 2 முதல் 2.5 லிட்டர் வரை சிறுநீர் கழிப்பவர்களுக்கு சிறுநீரக கற்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும். சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் இந்த பானத்தை காலை மற்றும் மதியம் குடிக்கலாம்.
மேலும் படிக்க | Diabetic Diet: இவற்றை உணவில் சேருங்கள், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்
சிறுநீரகத்தை சீராக வைத்திருக்க எலுமிச்சை கொண்டு சில பானங்களை செய்து குடிக்கலாம். இந்த பானங்களை அவ்வப்போது குடித்து வந்தால், அதனால் வரும் நன்மைகள் ஏராளமாக இருக்கும். அப்படிப்பட்ட எலுமிச்சை பானங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
1. மசாலா எலுமிச்சை சோடா
ஒரு கிளாஸில் எலுமிச்சை சாறு, சீரகம்-கொத்தமல்லி தூள், சாட் மசாலா மற்றும் சோடாவை நன்கு கலந்து குடிக்கவும். இப்படி செய்தால் உங்கள் சிறுநீரகத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும் ஒரு நல்ல பானம் உங்களுக்கு கிடைக்கும்.
2. புதினாவுடன் எலுமிச்சை
ஒரு கிளாஸ் தண்ணீரில் எலுமிச்சை சாறு, புதினா இலைகள் மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து குடிக்கலாம்.
3. தேங்காய் ஷிகன்ஜி
இந்த ஆரோக்கியமான பானத்தை தயாரிக்க, ஒரு கிளாஸில் இளநீரை விட்டு அதில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும்.
4. எலுமிச்சை சாறு
எலுமிச்சையில் சிட்ரேட் உள்ளது. இது சிட்ரிக் அமிலத்தில் உள்ள உப்பு, இது கால்சியத்துடன் பிணைக்கப்பட்டு கல் உருவாவதைக் குறைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | தேன் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவு குறையுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR