நீரிழிவு நோய்க்கான உணவுக் குறிப்புகள்: நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இருக்கும் பிரச்சனைகளில் அவர்கள் உட்கொள்ளும் உணவு ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. அதிக கலோரிகள் மற்றும் அதிக கிளைசெமிக் குறியீடு உள்ள பொருட்களை சாப்பிடுவதால், சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரிக்கிறது. ஆகையால் சர்க்கரை நோயாளிகள் எதையும் சாப்பிடுவதற்கு முன்னும் பல முறை யோசிக்க வேண்டும். சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், இதற்காக அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. தினசரி உணவில் சில ஆரோக்கியமான விஷயங்களைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பாகற்காய்
நல்லவை எப்பொழுதும் கசப்பாகத்தான் இருக்கும் என்பார்கள். பாகற்காய்க்கும் இதே நிலைதான். பாகற்காயின் சுவை எவ்வளவு கசப்பாக இருக்கிறதோ, அதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் அவ்வளவு அதிகம். பாகற்காய் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும். பி-இன்சுலின் என்ற பொருள் பாகற்காயில் உள்ளது. இது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் பாகற்காய் சாறு குடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். பாகற்காய் கறி நீரிழிவு நோயிலும் நன்மை பயக்கும்.
ராகி
ராகியில் நார்ச்சத்து, கால்சியம் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. ராகியின் கிளைசெமிக் குறியீடும் மிகக் குறைவு. சர்க்கரை நோயாளிகள் ராகி கொண்டு இட்லி, தோசை அல்லது பராத்தா செய்து காலை உணவாக சாப்பிடலாம். கோதுமையில் அதிக கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதால், சர்க்கரையின் அளவை அதிகரிக்கலாம். ஆனால், ராகி சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆகையால் ராகி கோதுமைக்கு நல்ல மாற்றாக அமையக்கூடும்.
மேலும் படிக்க | தேன் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவு குறையுமா?
நெளிகோதுமை
சர்க்கரை நோய்க்கு நெளிகோதுமை நன்மை பயக்கும். இது பொதுவாக விரதம் இருக்கும்போது சாப்பிடப்படுகிறது. ஆனால் நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், நெளிகோதுமை சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். இதில் வைட்டமின் பி, இரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. அதன் பயன்பாட்டினால் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருக்கும்.
முள்ளங்கி
நீரிழிவு நோயில் முள்ளங்கி சாப்பிடுவது நன்மை பயக்கும். முள்ளங்கியின் கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ளது. இதில் உள்ள பண்புகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் அன்றாட உணவில் முள்ளங்கி சாலட் அல்லது பரோட்டா போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மிடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR