பப்பாளி விதைகளின் பலே பயன்கள்: உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை!!
Papaya Seed Benefits: பப்பாளி விதைகளை உட்கொள்வதால் ஏற்படும் சில அற்புதமான நன்மைகள் மற்றும் அதை உட்கொள்ளும் முறை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பப்பாளி விதைகளின் நன்மைகள்: பழங்களின் நன்மைகளைப் பற்றி நாம் அதிகம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் பல பழங்களின் விதைகளும் ஆரோக்கியத்திற்கு ஒரு சஞ்சீவியாக செயல்படுகின்றன. இவற்றில் ஒன்று பப்பாளி. அதன் விதைகள் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகவே பயன்படுகின்றன. பெரும்பாலான மக்கள் இதன் விதைகளை பயனற்றவை என்று கருதி குப்பையில் வீசுகிறார்கள். ஆனால் அவற்றின் நன்மைகளைப் பற்றி அறிந்தால், அப்படி நாம் கண்டிப்பாக செய்ய மாட்டோம். பப்பாளி விதைகளின் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
பப்பாளியில் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் மெக்னீசியம் அதிகம் உள்ளன. இது பல வழிகளில் உடலுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை அகற்றவும் உதவுகிறது. பப்பாளி விதைகளை உட்கொள்வதால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும். பப்பாளி விதைகளை உட்கொள்வதால் ஏற்படும் சில அற்புதமான நன்மைகள் மற்றும் அதை உட்கொள்ளும் முறை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இப்படி உட்கொள்ளுங்கள்
பப்பாளி விதைகளை நேரடியாக உட்கொள்ள முடியாது. ஏனெனில் அவற்றின் சுவை துவர்ப்புத்தன்மை கொண்டது. ஆகையால் இவற்றை வெயிலில் காயவைத்து அரைத்து பொடி செய்து சாப்பிடுவது நல்லது. வெவ்வேறு பயன்களுக்கு பப்பாளி விதைகளை எப்படி உட்கொள்ள வேண்டும் என இங்கே காணலாம்.
கூந்தல் வளர்ச்சிக்கு:
பப்பாளி விதைகள் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகின்றன. இதில் வைட்டமின் ஏ உள்ளது. இது முடி வளர்ச்சிக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது.
இப்படி பயன்படுத்தவும்
பப்பாளி விதை தூள் மற்றும் தேன் கலந்து ஹேர் மாஸ்க் தயாரிக்கவும். இது உங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.
எடை இழப்புக்கு உதவியாக இருக்கும்
பப்பாளி விதைகள் எடை இழப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும். இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இது தவிர, உடலில் கூடுதல் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. இதில் காணப்படும் என்சைம்கள் எடையைக் குறைப்பது மட்டுமின்றி கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது.
கல்லீரலுக்கு
பப்பாளி விதைகள் கல்லீரலுக்கு மிகவும் நன்மை பயக்கும். கல்லீரல் ஈரல் அழற்சியிலும் இது மிகவும் நன்மை பயக்கும். அதன் விதைகளை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க | முடி அதிகம் உதிர்கிறதா? வீட்டில் செய்யக்கூடிய இந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடுங்கள்!
செரிமானத்திற்கு
பப்பாளி விதைகள் செரிமானத்திற்கும் பயனுள்ளதாக கருதப்படுகின்றன. இதில் செரிமான நொதிகளில் நிறைந்துள்ளன. இது புரதங்களை உடைக்க உதவி அதன் இயற்கையான செரிமான செயல்முறைக்கு உதவுகிறது. உணவில் உள்ள விஷத்தன்மையை எதிர்த்துப் போராடவும் இது உதவும்.
மூட்டு வலியில் நிவாரணம்
பப்பாளி விதையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் உடலில் ஏற்படும் அழற்சியை போக்க இது உதவுகிறது. மூட்டுவலி, மூட்டுவலியுடன் தொடர்புடைய வீக்கம் ஆகியவற்றை குறைக்க பாப்பைன் மற்றும் சைமோபபைன் என்சைம்கள் உதவுகின்றன.
பப்பாளி விதைகளை இப்படியும் உட்கொள்ளலாம்:
- பப்பாளி விதைகளை உட்கொள்வதற்கான சிறந்த வழி, அவற்றை பப்பாளியுடன் சேர்த்து சாப்பிடுவதாகும்.
- விதைகளை அரைத்து, இதை சாலடுகள் அல்லது சூப்களில் சேர்த்தும் பயன்படுத்தலாம்.
- பப்பாளி விதைகளை வெயிலில் உலர்த்தி பொடி செய்தும் சாப்பிடலாம்.
- ஒரு நாளைக்கு 5 முதல் 8 கிராம் விதைகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
- எலுமிச்சை சாறு அல்லது சாலட்டின் மீது பப்பாளி விதை தூளை தெளித்தும் உட்கொள்ளலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்கலிய உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தினமும் 30 நிமிடங்கள் போதும்... உடல் கொழுப்பை எரிக்கும் சில எளிய பயிற்சிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ