தினமும் 30 நிமிடங்கள் போதும்... உடல் கொழுப்பை எரிக்கும் சில எளிய பயிற்சிகள்!

உடல் பருமன் மற்றும் தொப்பை கொழுப்பை கரைக்க தினமும் செய்ய வேண்டிய எளிய பயிற்சிகளை அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 1, 2023, 11:17 AM IST
  • உடற்பயிற்சி உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் எலும்புகளை பலப்படுத்துகிறது.
  • ஆல்கஹால் மற்றும் புகைபிடிப்பதைத் தவிர்ப்பதை உறுதி செய்ய வேண்டும்
தினமும் 30 நிமிடங்கள் போதும்... உடல் கொழுப்பை எரிக்கும் சில எளிய பயிற்சிகள்! title=

உணவுக் கட்டுப்பாட்டைத் தவிர, கூடுதல் எடையைக் குறைக்க முயற்சிக்கும் மக்கள் கடைபிடிக்கும் மிகவும் பிரபலமான முறைகளில் ஒன்று உடற்பயிற்சி. நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது, உங்கள் உடல் அதிகபட்ச அளவில் கலோரிகளை எரிக்கிறது, இது எடை இழப்புக்கு முக்கியமானது. வழக்கமான உடற்பயிற்சி எடை இழப்புக்கு உதவுவது மட்டுமல்லாமல், நாள்பட்ட உடல்நலக் கோளாறுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கிறது. இந்த கட்டுரையில், விரைவான எடை இழப்பை உறுதிப்படுத்த நீங்கள் செய்யக்கூடிய 7 பயிற்சிகளை அறிந்து கொள்ளலாம். இருப்பினும், எடை இழப்பு பயணத்தைத் தொடங்குவதற்கு முன், எடை இழப்பு பற்றிய யோசனையை நீங்கள் முதலில் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். உடற்பயிற்சி என்பது உடல் எடையை குறைக்க உதவும் ஒரு முக்கிய செயலாகும். இதனை தொடர்ந்து செய்வதால் மட்டுமே பலன் கிடைக்கும். மேலும், பயிற்சிகளை தவிர, உடல் எடையை குறைக்க, நீங்கள் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மிக அவசியம், போதுமான தூக்கம் மற்றும் ஆல்கஹால் மற்றும் புகைபிடிப்பதைத் தவிர்ப்பதை உறுதி செய்ய வேண்டும்.

உடல் பருமனை குறைக்கும் உடற்பயிற்சிகள்
தினமும் தவறாமல் குறைந்தது 30 நிமிடங்களாவது உங்கள் ஆரோக்கியத்திற்காக செலவிடுங்கள். அது செய்யும் மந்திரத்தைப் பாருங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள பயிற்சிகளில் உங்களுக்கு ஏற்ற ஒன்றூ அல்லது இரண்டை தேர்ந்தெடுத்து, தினமும் உங்களுக்கு ஏற்ற ஏதாவது ஒரு பயிற்சியினை தினமும் 30 நிமிடங்கள் செய்யவும். கை மேல் பலன் கிடைக்கும்

நடைபயிற்சி

நடைப்யிற்சி என்பது அனைத்து வயதினரும், பல விதமான உடல் பிரச்சனை உள்ளவர்களும் கடைபிடிக்க கூடிய மிக முக்கிய பயிற்சி. குறைந்தது 30 நிமிடங்களாவது தவறாமல் நடப்பது பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். அவற்றில் ஒன்று எடை இழப்பு. புதிதாக உடற்பயிற்சி செய்ய தொடங்குபவர்கள்,  தாரளமாக தொடங்க கூடிய பயிற்சி. உபகரணங்கள் எதுவும் தேவைப்படாத மிக மிக எளிய பயிற்சி. கூடுதலாக, இது உடல் பாதிப்பை ஏற்படுத்தாதா பயிற்சி என்பதால், உங்கள் மூட்டுகளுக்கு கூடுதல் பளு போன்ற பிரச்சனை எதுவுமே இருக்காது.

ஜாகிங் அல்லது ஓடுதல்

ஓட்டம் மற்றும் ஜாகிங் உடல் எடையை குறைக்க சிறந்த பயிற்சிகள். ஒரு ஜாகிங் வேகம் பெரும்பாலும் 4-6 mph (6.4-9.7 km/h) இடையே இருக்கும். அதேசமயம், தோற்றத்தில் ஒற்றுமைகள் இருந்தாலும், ஓடும் வேகம் 6 mph (9.7 km/h) ஐ விட வேகமாக இருக்கும்.

சைக்கிள் ஓட்டுதல்

உங்களுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியுமா? உடல் எடையை குறைக்க மிகச் சிறந்த பயிற்சி. சைக்கிள் ஓட்டுதல் என்பது மிகவும் விரும்பப்படும் உடற்பயிற்சியாகும். இது உடல் பிட்னஸை அதிகரிக்கிறது மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது. சைக்கிள் ஓட்டுதல் என்பது பொதுவாக வெளிப்புற பயிற்சியாகும். இருப்பினும் , இப்போது பயிற்சிக்காக, ஜிம்கள் மற்றும் உடற்பயிற்சி மையங்களில், நிலையான சைக்கிள்கள் வைக்கப்படுகின்றன. வீட்டிலும் பயிற்சிக்கான சைக்கிளை வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

பளு தூக்கும்  பயிற்சி

அடிக்கடி உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் எடையை தூக்குவதை தேர்வு செய்கிறார்கள். 155-பவுண்டு (70-கிலோ) எடை கொண்ட நபர் 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்யும் போது 108 கலோரிகளை எரிக்கிறார். கூடுதலாக, எடை தூக்கும் பயிற்சியானது உங்கள் ஓய்வு வளர்சிதை மாற்ற விகிதத்தை (RMR) அதிகரிக்கலாம் அல்லது தசை வளர்ச்சி மற்றும் வலிமையை அதிகரிப்பதன் மூலம் உங்கள் உடல் ஓய்விலும் எத்தனை கலோரிகளை எரிக்கிறது. எனினும் இதனை தகுந்த ட்ரெயினரை வைத்துக் கொண்டு செய்து நல்லது.

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் காலையில் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்!

நீச்சல்

நீச்சல் உடல் எடையை குறைக்கவும், டோனிங் செய்யவும் ஒரு அற்புதமான அணுகுமுறை. 70 கிலோ எடையுள்ள ஒருவருக்கு 30 நிமிடங்கள் நீச்சல் அடிப்பதால் சுமார் 216 கலோரிகள் எரிக்கப்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

யோகா

யோகா என்பது உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு சிறந்த பயிற்சி வடிவமாகும். இது பொதுவாக ஒரு எடை குறைப்பு வொர்க்அவுட்டாக பார்க்கப்படவில்லை என்றாலும், இதனால், தினமும் குறிப்பிட்ட அளவு கலோரிகளை எரிக்கிறது மற்றும் எடை இழப்புக்கு உதவும் பல நன்மைகளையும் கொண்டுள்ளது.

எலும்புகளை பலப்படுத்தும் உடற்பயிற்சி 

உடற்பயிற்சி உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் எலும்புகளை பலப்படுத்துகிறது, உங்கள் மனநிலையை மேம்படுத்துகிறது மற்றும் பல நாட்பட்ட பிரச்சனைகளை உருவாக்கும் அபாயத்தை குறைக்கிறது. எனவே, நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்? இன்றே தினமும் உங்களுக்கு ஏற்ற ஏதேவது ஒரு பயிற்சியினை தினமும் 30 நிமிடங்கள் செய்யவும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் தகுதி வாய்ந்த மருத்துவ நிபுணர்களால் வழங்கப்படும் ஆலோசனைக்கு மாற்றாகக் கருதப்படக்கூடாது. உங்கள் தினசரி வழக்கத்தில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், ஒரு நிபுணரை அணுகுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | மாரடைப்பின் ‘இந்த’ அறிகுறிகளை ஒரு போதும் அலட்சியம் செய்யாதீர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News