Benefits of Soaked Peanuts: நிலக்கடலை ஒரு சுவையான உணவு. இது குளிர்காலத்தில் மிகவும் விரும்பி சாப்பிடப்படுகிறது. ஆனால் வேர்க்கடலையில் உள்ள ஏராளமான நன்மைகளால் அது ஒரு சூப்பர்ஃபுட் அதாவது மிகச்சிறந்த உணவாக கருதப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேர்க்கடலையில் (Peanuts) உள்ள சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றன. ஊறவைத்த வேர்க்கடலையை எப்போது உட்கொள்ள வேண்டும் மற்றும் ஊறவைத்த வேர்க்கடலையின் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம். 


இந்த நேரத்தில் ஊறவைத்த வேர்க்கடலையை சாப்பிடவேண்டும்: 


ஊறவைத்த வேர்க்கடலையை சாப்பிட சிறந்த நேரம் எது? 


வேர்க்கடலையில் புரதம், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன. 


வேர்க்கடலையை ஊறவைத்த பிறகு இவை மேலும் அதிகரிக்கும். ஒரு கைப்பிடி வேர்க்கடலையை ஒரு கிண்ணத்தில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அப்படி செய்தால், உடல் ஆர்க்கியத்துக்கு பலவித நன்மைகள் உண்டாகும். பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி போன்றவை வேர்க்கடலையில் உள்ளன.


டாக்டர் அபிரார் முல்தானியின் கூற்றுப்படி, வேர்க்கடலையில் அதிக கலோரிகள் உள்ளன. எனவே, அதை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இருப்பினும், இதை ஒரு சீரான முறையில் சாப்பிடுவது நன்மைகளை மட்டுமே தருகிறது.


ALSO READ: Health Alert! அளவுக்கு மிஞ்சிய சீரகம் பெரும் கேடு விளைவிக்கும்..!! 


ஊறவைத்த வேர்க்கடலையின் நன்மைகள்: 


ஆயுர்வேத நிபுணர்களின் கூற்றுப்படி, தினமும் காலையில் ஊறவைத்த வேர்க்கடலையை உட்கொண்டால், பின்வரும் நன்மைகள் கிடைக்கும். 


- தோல் பிரச்சனைகளில் (Skin Problems) இருந்து நிவாரணம் கிடைக்கும்.


- செரிமானம் சரியாகி மூளை திறன் அதிகரிக்கும்.


- இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.


- இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்.


- அதிக நேரத்திற்கு வயிறு நிறைவாக இருக்கும். 


ஊறவைத்த வேர்க்கடலை எடை குறைக்க உதவுகிறது


வேர்க்கடலையில் கலோரிகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. ஆனால் இதை ஒரு சீரான முறையில் உட்கொண்டால், எடையை குறைக்க உதவும். 


ஏனெனில், இதில் உள்ள நார்ச்சத்து (Fiber) மற்றும் புரதம் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமல் பார்த்துக்கொள்ளும். நீண்ட நேரத்திற்கு  வயிற்றை நிரைவாக வைக்கும். இதன் காரணமாக உங்கள் பசி கட்டுப்பாட்டில் இருக்கும். கண்ட நேரத்தில் கண்ட உணவை உண்ணும் எண்ணம் வராது.


குறிப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைகளுக்கும் மாற்று அல்ல. இது கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.


ALSO READ: Health Alert! சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்..!! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR