இன்றைய மாறிவரும் சூழலில் நமக்கென நேரம் ஒதுக்குவது மிகவும் கடினமான பணியாக மாறியுள்ளது. பெரும்பாலானவரகளால் தங்கள் முக பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த முடிவதில்லை. இன்றைய வாழ்க்கை முறையால், பலருக்கு தங்கள் உடல்நலம் அல்லது அழகு பராமரிப்புக்கு நேரம் கிடைப்பதில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், இவற்றுக்கு செலவிட மூன்று நிமிடங்கள் கூட இல்லாமல் யாரும் இருக்க மாட்டார்கள். மூன்று நிமிடங்ளில் என்ன செய்ய முடியும் என உங்களுக்குத் தோன்றலாம். மூன்றே நிமிடங்கள் இதற்காக செலவிட்டால், உங்கள் முகத்தை அழகாக பராமரிக்கலாம். உறங்குவதற்கு முன் மூன்று நிமிடங்கள் முகத்திற்கான உடற்பயிற்சி செய்ய வேண்டும். 


உறங்குவதற்கு மூன்று நிமிடங்களுக்கு முன் சில பயிற்சிகள் செய்தால், உடனடி பலன் கிடைக்கும். அத்தகைய மேஜிக் செயல்கள் என்னென்ன என இந்த பதிவில் காணலாம். 


பலன்கள் உடனடியாகத் தெரியும், புத்துணர்ச்சி அடைவீர்கள்


இரவில் படுக்கும் முன் வெறும் 3 நிமிடம் உங்கள் முகத்தில் இதை செய்தால், உங்களுக்கு திருப்திகரமான விளைவுகள் கிடைக்கும். இதைச் செய்வதன் மூலம், நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். தினமும் காலையில் உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.


மேலும் படிக்க | Cerebral Palsy: சத்யா நாதெள்ளா மகனின் உயிரை பறித்த பெருமூளை வாத நோயின் அறிகுறிகள்!


கண்களுக்கு அருகில் மசாஜ் செய்யவும்


முதலில், கண்களுக்கு அருகில் ஒரு முக கிரீம் கொண்டு மெதுவாக மசாஜ் செய்யவும். இது நாள் முழுவதும் சோர்வடைந்த கண்களுக்கு சிறிது ஓய்வு அளித்து, புத்துணர்ச்சியை கொடுக்கும். நாள் முழுவதும் உங்கள் உடலைப் போலவே, கண்களும் சோர்வடைகின்றன. இதன் காரணமாக அவற்றில் சோர்வு காணப்படுகிறது. ஆகையால் முகத்துக்கு புத்துணர்ச்சி அளிப்பது மிகவும் அவசியமாகும். 


கழுத்து மசாஜ் செய்யுங்கள்


நாள் முழுவதும் அலுவலகத்தில் வேலை செய்யும் போது பெரும்பாலும் அனைவரும் கணினி அல்லது லேப்டாப்பை பார்த்து வேலைகளை செய்கிறோம். இதனால் கழுத்துப் பகுதிக்கு அதிகப்படியான இறுக்கமும் சோர்வும் ஏற்படுகின்றது. ஆகையால் கழுத்துப்பகுதிக்கான பயிற்சிகளை செய்வது அவசியமாகும். 


இதற்கு முதலில் உங்கள் கைகளால் கழுத்தின் உச்சிப்பகுதியை தொடவும். அதன் பிறகு மெதுவாக அங்கு மசாஜ் செய்யவும். தினமும் 30 வினாடிகள் இப்படி உடற்பயிற்சி செய்வது நிச்சயம் பலன் தரும்.


வாயைச் சுற்றி மசாஜ் செய்யவும்


வாய்க்கு அருகில் மசாஜ் செய்வது மிகவும் முக்கியம். இதற்கு கைகளால் வாயைச் சுற்றி கிரீம் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் உடனடி பலன் கிடைக்கும். மேலும் அடிக்கடி உப்பு நீர் கொப்பளித்து வந்தால், பற்களும் வாயின் உட்பகுதியும் ஆரோக்கியமாக இருக்கும்.


பொதுவான முக பராபரிப்பாக, அவ்வப்போது கண்களையும் முகத்தையும் குளிர்ந்த நீர் கொண்டு கழுவுதல் நல்லது.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாகாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Heart Disease: இதய நோயிலிருந்து உங்களை பாதுகாக்க உதவும் ‘4’ டிப்ஸ்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR