ஆரோக்கியம் ஓஹோன்னு இருக்க ஓமம் அவசியம்: இதில் இருக்கு எக்கச்சக்க நன்மைகள்
Benefits of Carom Seeds: ஓமத்தில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன.
Benefits of Carom Seeds: ஓமம் நம் பண்டைய காலம் முதல் பயன்பாட்டில் உள்ள ஒரு மூலிகை பொருளாகும். இது பல்வேறு உணவு வகைகளில் பயன்படுகின்றது. உணவிற்கு ஒரு வித்தியாசமான சுவையை அளிப்பதோடு இது பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. பலரை பாடாய் படுத்தும் தொப்பை கொழுப்பை (Belly fat) குறைப்பதிலும் எடை இழப்பிலும் இது பல வழிகளில் உதவுகின்றது. ஓமம் உட்கொள்வதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். ஓமத்தில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் பிற ஆரொக்கிய நன்மைகள் அதிகம் உள்ளன. ஓமத்தில் உள்ள கூறுகள் செரிமானத்தை மேம்படுத்துகிறது, வாயுத்தொல்லை மற்றும் அமிலத்தன்மையை குறைக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. ஓமத்தில் உள்ள பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஓமத்தின் ஆரோக்கிய நன்மைகள்
உடல் எடையை குறைக்கிறது: ஓமத்தில் உள்ள தைமால் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: ஓமத்தில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன.
வாயுத்தொல்லை, உடல் உப்பசம்: ஓமத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது வாயுத்தொல்லை, உப்பசம் மற்றும் உடல் வீக்கம் ஆகியவற்றை குறைக்க உதவுகின்றன.
வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கலில் நிவாரணம்: ஓமத்தின் பயன்பாடு வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் என இரண்டிலிருந்தும் நிவாரணம் அளிக்க உதவுகிறது.
சீரான செரிமானம்: ஓமத்தில் தைமால் மற்றும் கார்க்ரூல் எனப்படும் சேர்மங்கள் உள்ளன. இது செரிமான சாறுகளின் சுரப்பை ஊக்குவித்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.
பற்கள் மற்றும் ஈறுகளுக்கு நன்மை பயக்கும்: ஓமம் பற்கள் மற்றும் ஈறுகளுக்கும் நன்மை பயக்கும். ஓமத்தின் மூலம் வீங்கிய ஈறுகள் மற்றும் பல்வலி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கின்றது.
வயிற்று வலி மற்றும் அஜீரணத்தில் நிவாரணம்: ஓமத்தை உட்கொள்வதால் வயிற்று வலி, அஜீரணம், வாயுத்தொல்லை மற்றும் அமிலத்தன்மை ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கின்றது.
சுவாச அமைப்பில் ஓமத்தின் பயன்பாடு:
சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கும்: ஓமத்தில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரச் எதிர்ப்பு பண்புகள் சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.
சுவாச பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்: ஓமம் சுவாச பிரச்சனைகள், ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.
ஓமத்தை எப்படி உட்கொள்வது?
- ஓமத்தை பல வழிகளில் உட்கொள்ளலாம்.
- இதை காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் பிற உணவுகளில் சேர்த்து சுவையையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
- ஓமத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்தும் குடிக்கலாம்.
- ஓமத்தை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு அதை உணவில் சேர்க்கலாம், தண்ணீரில் கலந்து சாப்பிடலாம்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடல் எடை வேகமா குறைய இந்த 5 பழங்களை சாப்பிட்டால் போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ