ஜிம், டயட் இல்லாமலும் ஜம்முனு எடையை குறைக்கலாம்: இப்படி பண்ணுங்க போதும்

Weight Loss Tips: உடல் எடை வேகமாக அதிகரிக்கின்றதா? தொப்பை கொழுப்பு பாடாய் படுத்துகிறதா? உங்களுக்கான பதிவுதான் இது.

Weight Loss Tips: மரபணு, ஹார்மோன் பிரச்சனைகள், தவறான உணவு பழக்கவழக்கங்கள், ஒழுங்கற்ற வாழ்க்கை முறை ஆகிய பல காரணங்களால் உடல் பருமன் அதிகரிக்கின்றது. உடல் எடையை குறைக்க சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். ஆனால், அனைவருக்கும் இதற்கான வசதியும் நேரமும் இருப்பதில்லை. அப்படிப்பட்டவர்கள் சில பழக்க வழக்கங்களை பின்பற்றினால் தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைத்து உடல் எடையை எளிதாக குறைக்கலாம். அவற்றை பற்றி இங்கே காணலாம். 

 

1 /8

உடல் பருமன் இந்த காலத்தில் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. உடல் எடை வேகமாக அதிகரித்து விடுகின்றது. ஆனால் அதை குறைப்பது ஒரு பிரம்ம பிரயத்னமாகவே உள்ளது.

2 /8

உடல் எடையை குறைக்க சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். ஆனால், அனைவருக்கும் இதற்கான வசதியும் நேரமும் இருப்பதில்லை. அப்படிப்பட்டவர்கள் சில பழக்க வழக்கங்களை பின்பற்றினால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். அவற்றை பற்றி இங்கே காணலாம். 

3 /8

சமச்சீர் உணவு: நார்ச்சத்து, கேல்சியம், வைட்டமின்கள், மினரல்கள், இரும்புச்சத்து, ஆரோக்கியமான கொழுப்பு என உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் அடங்கியிருக்கும் ஒரு சமச்சீரான உணவை உட்கொள்ள வேண்டும். 

4 /8

குறைந்த கலோரி உணவு: குறைந்த கலோரி கொண்ட உணவை உட்கொள்வது நமது எடை இழப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அதிக கலோரி கொண்ட உணவுகளை உட்கொள்ளும் போது, அதை எரிக்க நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் அதிகமாகின்றன. ஆகையால் நாம் தினசரி உட்கொள்ளும் உணவிலேயே குறைந்த கலோரி கொண்ட உணவு வகைகளை உட்கொள்வது நல்லது. 

5 /8

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிக அவசியமாகும். உடல் எடை அதிகரிக்காமல் இருக்க செரிமானம் சீராக அமைவது மிக அவசியம்.  உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றுவதற்கு சரியான அளவு தண்ணீர் குடிப்பது மிக அவசியமாகும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் எடை இழப்பு தவிர இன்னும் பல ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகின்றன. 

6 /8

உடல் செயல்பாடு மிக அவசியமாகும். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் ஒரே இடத்தில் அமர்ந்து பணிபுரிகிறோம். இதனால் உடல் பருமன் அதிகமாகின்றது. இதை தவிர்க்க, தினமும் உடற்பயிற்சி, யோகா, நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி என இவற்றில் ஏதாவது ஒன்றை கண்டிப்பாக செய்வதை பழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். 

7 /8

தூக்கம்: தினமும் 7-8 மணி நேரம் உறங்குவது மிக அவசியம். இதை விட குறைவான நேரத்திற்கு உறங்கினால், சிறிது சிறிதாக உடல் எடை அதிகரிக்கத் தொடங்குகிறது. போதுமான தூக்கம் இல்லாமல் போனால் பசியும் அதிகமாக எடுக்கும். இதனால் இரவு நேரங்களில் உணவு உட்கொள்ளும் பலர் உடல் பருமனால் அவதிப்பட நேர்கிறது.

8 /8

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.