இரத்த அழுத்தம் முதல் கொலஸ்ட்ரால் வரை: பூண்டின் வேற லெவல் நன்மைகள்
Garlic Benefits: பூண்டு சாப்பிடுவதன் மூலம் எந்தெந்த உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பூண்டின் ஆரோக்கிய நன்மைகள்: உலகெங்கிலும் உள்ள பல உணவு வகைகளில் சேர்க்கப்படும் பூண்டில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பூண்டு அதன் வாசனை மற்றும் சுவைக்கு பெயர் பெற்றது. பூண்டை உட்கொள்வதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் நோய்த்தொற்றுகள் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை நீக்குவதற்கு இது உதவியாக இருக்கும்.
பூண்டு பெரும்பாலும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதை பச்சையாக சாப்பிடலாம் அல்லது உணவுகளில் சேர்த்தும் சாப்பிடலாம். பூண்டு சாப்பிடுவதன் மூலம் எந்தெந்த உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது:
பூண்டில் அல்லிசின் போன்ற சேர்மங்கள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும் உதவும்.
இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்:
பூண்டு இரத்த அழுத்தத்தில் நல்ல விளைவைக் கொண்டிருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் இதய நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஏற்படக்கூடிய அபாயத்தைக் குறைக்கிறது.
கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும்:
பூண்டு கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. மேலும் இது கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கிறது.
மேலும் படிக்க | Kidney Detox: சிறுநீரகத்தை இயற்கையாக சுத்தம் செய்யும் ‘சூப்பர்’ உணவுகள்!
அழற்சி எதிர்ப்பு பண்புகள்:
பூண்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட கலவைகள் உள்ளன. இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதோடு, மூட்டுவலி போன்ற பிரச்சனைகளுக்கும் உதவியாக இருக்கும்.
புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது:
சில ஆய்வுகள் பூண்டு வயிறு மற்றும் பெருங்குடல் புற்றுநோய் உள்ளிட்ட சில புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்று நிரூபித்துள்ளன.
இதய ஆரோக்கியம்:
இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க பூண்டு உதவுகிறது. பூண்டு உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும்.
உடல் எடையை குறைக்க பூண்டு எவ்வாறு உதவுகிறது?
காலையில் வெறும் வயிற்றில் ஒரு சில பூண்டு பற்களை சாப்பிட்டு வந்தால், உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பு கரைந்து, உடல் எடை குறையும். பூண்டில் உள்ள பூஸ்டிங் லெவல் கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகிறது. இதை உட்கொள்வதன் மூலம், நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருப்பதை போன்ற உணர்வு ஏற்படும். அதனால் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
(பொறுபுத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | நெல்லிக்காய் நீர்: எடை இழப்பு, நீரிழிவு நோய்... அனைத்திலும் நன்மை பயக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ