இந்துப்பு சேர்ப்பதால் இத்தனை நன்மைகளா.. வியக்க வைக்கும் ஆரோக்கிய பலன்கள்!
உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே என்ற பழமொழியை அனைவரும் கேட்டிருக்க கூடும். சமையலில் தவிர்க்க முடியாத ஒரு பொருள் உப்பு. நாம் தினசரி பயன்படுத்தும் இந்த உப்பில், சாதாரண உப்பை தவிர ஆரோக்கியம் குறித்து அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் அதிகம் பயன்படுத்துவது இந்துப்பு.
உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே என்ற பழமொழியை அனைவரும் கேட்டிருக்க கூடும். சமையலில் தவிர்க்க முடியாத ஒரு பொருள் உப்பு. நாம் தினசரி பயன்படுத்தும் இந்த உப்பில், சாதாரண உப்பை தவிர ஆரோக்கியம் குறித்து அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் அதிகம் பயன்படுத்துவது இந்துப்பு. இது சிறிது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இமயமலையிலும், வட மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா ஆகிய இடங்களிலும் பாறைகளிலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. இந்துப்பில் உடலுக்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம், தாமிர சத்து போன்ற பலவித சத்துக்கள் அடங்கியுள்ளன. சித்த மருத்துவமும் இந்துப்புக்கு தனி இடம் கொடுத்துள்ளது.
இந்நிலையில், இதை தினமும் சாப்பிட்டு வந்தால், உங்கள் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். இந்துப்பு உங்கள் தசைகளில் உள்ள பிடிப்பைக் குறைக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்துப்பை ஏன் தினமும் உட்கொள்ள வேண்டும் என்பதையும், தினமும் இந்துப்பை உட்கொள்வதால் என்ன நன்மைகள் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
தசைப்பிடிப்புகளை நீக்கும் இந்துப்பு
இந்துப்புவில் பல்வேறு எலக்ட்ரோலைட்டுகள் இருப்பதால், சில தசைப்பிடிப்பு மற்றும் வலிகளை போக்க்கும் என்கின்றனர் நிபுணர்கள். தசைப்பிடிப்பு பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள் இந்துப்பை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் தீர்வினை பெறலாம். மேலும் தசைகளில் வீக்கம், வலி அல்லது தசைப்பிடிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால், வெதுவெதுப்பான நீரில் இந்துப்பை கலந்து குடிக்கலாம். எனினும் இதனை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது முக்கியம்.
செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம்
ஆயுர்வேத மருத்துவத்தில் நெஞ்செரிச்சல், அசிடிட்டி, வயிற்றுப்புழுக்கள், மலச்சிக்கல், வயிற்று வலி மற்றும் வாந்தி உள்ளிட்ட செரிமான தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்துப்பு பயன்படுத்தப்படுகிறது. வயிற்றுவலி அதிகமாக இருந்தால், தயிரில் சிறிது புதினா இலைகளை நறுக்கி சேர்த்து இந்துப்பு கலந்து குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
மேலும் படிக்க | Health Tips: உடலுக்கு ஆக்ஸிஜனை அள்ளி வழங்கும் 'சில' பழங்கள்!
தொண்டை வலிக்கு தீர்வு
மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப தொண்டைவலி, சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது தற்போது சகஜம். இந்த பிரச்சனையை சமாளிக்க இந்துப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதற்கு வெதுவெதுப்பான நீரில் இந்துப்பை கலந்து வாய் கொப்பளிக்கவும்.
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் இந்துப்பு
இந்துப்பை உட்கொள்வது உங்கள் வளர்சிதை மாற்ற செயல்முறையை மேம்படுத்தும். அலர்ஜி பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். கல் உப்பை தினமும் சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
ஈறு பிரச்சனைக்கு தீர்வு
பற்களில் வலி, வீக்கம் போன்ற ஈறு பிரச்சனைகளில் இருந்து விடுபட இந்துப்பை பயன்படுத்தலாம். இதற்கு வெதுவெதுப்பான நீரில் இந்துப்பைக் கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஈறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
மேலும் படிக்க | Heart Health: இதய நோய் அண்டாமல் இருக்க ‘இவற்றை’ பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்!
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ