பருவகால நோய்களில் இருந்து பாதுகாக்கும் சுலபமான வழி...

Improve Immunity: வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது நமது ஆரோக்கியத்திற்கு நல்லது. அதற்கு அடிப்படை உணவு தான். உணவில் சிலவற்றை அதிகரித்தால், நோயெதிர்ப்பு சக்தியும் மேம்படும். 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 4, 2022, 04:42 PM IST
  • நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் ஊட்டச்சத்துகள்
  • நமது ஆரோக்கியம் நமது கையில்
  • நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்
பருவகால நோய்களில் இருந்து பாதுகாக்கும் சுலபமான வழி... title=

Improve Immunity: வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது நமது ஆரோக்கியத்திற்கு நல்லது. அதற்கு அடிப்படை உணவு தான். உணவில் சிலவற்றை அதிகரித்தால், நோயெதிர்ப்பு சக்தியும் மேம்படும். இன்னும் சில நாட்களில் குளிர் காலம் தொடங்கவிருக்கும் நிலையில், காலை மற்றும் மாலை நேரத்தின் வெப்பநிலை மாறுகிறது. காலையில் குளிர்ந்த காற்று மற்றும் மாலையில் பனி விழுவதால், சளி, காய்ச்சல், ஒவ்வாமை, ஆஸ்துமா மற்றும் தொண்டை மற்றும் மூட்டுகளில் வலி போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும்.

இவற்றை எதிர்கொள்ள, உணவில் கவனம் செலுத்துவதும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் அவசியம் ஆகும். அதுமட்டுமல்லாமல், மாறிவரும் பருவத்தில் கொசுத் தொல்லையும் அதிகம்.  மாறிவரும் பருவத்தில் உங்கள் எச்சரிக்கையால் மட்டுமே உங்களைக் காப்பாற்ற முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

நமது ஆரோக்கியம் நமது கையில் என்பதால், நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது நம்மால் மட்டுமே முடியும். இந்த உணவுப் பொருட்களை உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியம் மேம்படும்.

மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

அஜீரணத்தை போக்கும் பொடி: உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, ஓமம், கருப்பு உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் இந்தப் பொடியை ஒரு ஸ்பூன் கலந்து குடிக்கவும். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செரிமான சக்தியை அதிகரிக்கும். இதனால் வாயு, அசிடிட்டி, அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

மஞ்சள் பால்: பாலில் மஞ்சளை சேர்த்து கொதிக்க வைத்து, அதை தூங்கும் முன் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். மஞ்சள் கலந்த பால் சுவையாக இருப்பதுடன், ஆன்டிபயாடிக் பண்புகள் நிறைந்தது. இதன் மூலம் தொற்றுநோய்களிலிருந்தும் பாதுகாப்பாக இருக்கலாம். மஞ்சள் பால் அனைத்துவித வைரஸ்களில் இருந்தும், சளி, இருமல் போன்றவற்றில் இருந்தும் பாதுகாக்கும்.  

துளசி-இஞ்சி மற்றும் தேன்: மாறும் பருவத்தில், துளசி-இஞ்சி மற்றும் தேன் ஆகிய மூன்றையும் சேர்த்து எடுத்துக் கொள்வது நல்ல பலன் அளிக்கும். துளசி மற்றும் இஞ்சியின் சாற்றை எடுத்துக் கொண்டு, அத்துடன் தேனைக் கலந்து ஒரு தேக்கரண்டி குடித்தால், அது உடலை வலிமையாக்கும். உடலில் உள்ள நச்சுத்தன்மைகலை நீக்கும் அருமருந்து இந்தக் கலவை ஆகும்.

உலர் பழங்கள்: உலர் பழங்களை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. பாதாம், வால்நட்ஸ் போன்ற உலர் பழங்களை தினமும் சாப்பிட வேண்டும். 

மேலும் படிக்க | Health Alert: நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி 

வைட்டமின்-சி: வைட்டமின்-சி நிறைந்த பொருட்களை அதிகம் எடுத்துக்கொள்ளத் தொடங்குங்கள். ஏனெனில் அவற்றை உட்கொள்வதன் மூலம், பல வகையான நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கலாம். மாறிவரும் பருவத்தில் ஏற்படும் நோய்களிலிருந்தும் பாதுகாக்கும் இந்த வைட்டமின், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு நல்லது. எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்: ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் மழைக்காலத்தில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைக்கிறது. கொழுப்பு நிறைந்த மீன், அக்ரூட் பருப்புகள், ஆளிவிதைகள், சியா விதைகள் மற்றும் தாவர எண்ணெய்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.

அவை வெள்ளை இரத்த அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கின்றன மற்றும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராக போராடுகின்றன. இந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால், நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறுவதோடு, நோய்கள் உங்களைத் தொந்தரவு செய்யாது.

மேலும் படிக்க | பளபளக்கும் ஆரோக்கியமான கூந்தலுக்கு 5 உணவுகள் செய்யும் மாயம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News