முள்ளங்கி இலை: சிறுநீரக கல் முதல் மூலநோய் வரை, பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு
Radish Leaves benefits: முள்ளங்கியில் பல ஆரோக்கிய நன்மைகள் உண்டு என்பது பலருக்குத் தெரியும். எனினும், அதன் இலைகளும் ஆரோக்கியத்தின் பொக்கிஷம் என்பது பலருக்கு தெரியாது.
முள்ளங்கி இலைகளின் பலன்கள்: இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் குளிர்காலம் தொடங்கிவிட்டது. இந்த சீசனில் காய்கறி சந்தைகளில் முள்ளங்கி அதிக அளவில் கிடைக்கும். சாம்பார், கறி, ஊறுகாய், சாலட் என பல வகைகளில் முள்ளங்கி நமது சமையலில் பயன்படுகிறது. முள்ளங்கியில் பல ஆரோக்கிய நன்மைகள் உண்டு என்பது பலருக்குத் தெரியும். எனினும், அதன் இலைகளும் ஆரோக்கியத்தின் பொக்கிஷம் என்பது பலருக்கு தெரியாது. முள்ளங்கி இலைகள் உடலில் உள்ள நச்சை நீக்கும். மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கு முள்ளங்கி இலைகள் மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. இந்த இலைகள் சருமத்திற்கும் பொலிவைத் தருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பல வித நன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ள முள்ளங்கி இலைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளாலாம்.
முள்ளங்கி இலைகளின் நன்மைகள்
முள்ளங்கி இலைகள் சிறுநீரக கற்களை நீக்குவதில் நன்மை பயக்கும்
சிறுநீரக கற்களை நீக்குவதில் முள்ளங்கி இலைகள் மிகவும் நன்மை பயக்கும் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அவை கற்களை துண்டுகளாக உடைத்து சிறுநீர் மூலம் வெளியேற்றுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். முள்ளங்கி இலை சிறுநீரை சீராக கழிக்கவும் உதவுகின்றன.
சருபத்துக்கு நன்மை பயக்கும்
பருக்கள் பிரச்சனை உள்ளவர்களுக்கு முள்ளங்கி இலைகள் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. முள்ளங்கி இலையில் வைட்டமின்-ஏ உள்ளது. இது பருக்கள் பிரச்சனையை நீக்கும். எனினும், கர்ப்பிணிப் பெண்கள், முள்ளங்கி இலைகளை உட்கொள்ளும் முன்பாக மருத்துவரின் அறிவுரையை பெற வேண்டும்.
முள்ளங்கி இலை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
முள்ளங்கி இலைகளில் நல்ல அளவு வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, பருக்கள், புண்கள் போன்ற சரும பிரச்சனைகளில் இருந்தும் இது பாதுகாக்கிறது.
மேலும் படிக்க | Diabetic Cure: சர்க்கரை நோய்க்கு வரப்பிரசாதமாகும் சஞ்சீவனி ‘இலைகள்’
மூலநோயில் நன்மை பயக்கும்
பைல்ஸ் பிரச்சனையால் சிரமப்படுபவர்களுக்கு முள்ளங்கி இலைகள் மிகவும் நன்மை பயக்கும். முள்ளங்கி இலைகள் வீக்கத்தைக் குறைக்கின்றன. இது தவிர, இவற்றில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தி பைல்ஸ் பிரச்சனையை நீக்குகிறது.
முள்ளங்கி இலை ஹீமோகுளோபினை அதிகரிக்கும்
ஹீமோகுளோபின் குறைவால் சிரமப்படுபவர்கள், முள்ளங்கி இலையை உட்கொள்ளலாம். இவை ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும். முள்ளங்கி இலைகளில் நல்ல அளவு இரும்புச்சத்து உள்ளது. இது இரத்தத்தை உருவாக்க உதவுகிறது. ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்கள் வாரம் ஒருமுறை முள்ளங்கி இலைகளை உட்கொள்ள வேண்டும்.
முள்ளங்கி இலைகளை எப்படி சாப்பிடுவது
முள்ளங்கி இலையில் காய்கறி செய்து சாப்பிடலாம். இது தவிர இலைகளை ஆவியில் வேக வைத்து சாண்ட்விச் செய்யலாம். முள்ளங்கி இலையின் பல சுவையான கறி வகைகளுக்கான செய்முறைகள் பல்வேறு இணையதளங்களில் கிடைக்கின்றன.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Weight Loss Tips: இந்த 3 மூன்று தவறுகளை மட்டும் பண்ணாதிங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ