நீரிழிவை ஓட விரட்டும் ‘கேழ்வரகின்’ வியக்க வைக்கும் ஆரோக்கிய நலன்கள்!
தவறான உணவுப் பழக்கத்தாலும் இல்லாத வாழ்க்கை முறையாலும் நோய்கள் வந்தால் உணவாக கை கொடுப்பது சிறுதானியங்கள் என்றால் மிகையில்லை. அதேபோன்று நோய்கள் நம் உடலை அண்டாமல் காப்பதும் சிறுதானியங்கள் தான்.
தவறான உணவுப் பழக்கத்தாலும் இல்லாத வாழ்க்கை முறையாலும் நோய்கள் வந்தால் உணவாக கை கொடுப்பது சிறுதானியங்கள் என்றால் மிகையில்லை. அதேபோன்று நோய்கள் நம் உடலை அண்டாமல் காப்பதும் சிறுதானியங்கள் தான். மேலும் சிறுதானியங்கள் வறட்சியைத் தாண்டி வளரக்கூடிய பயிர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக நெல் போன்ற தானியங்களை விளைவிக்க முடியாத ஒரு சூழல் உருவாகும் போது நம்மை மீட்க போகிறவை சிறுதானியங்கள் தான். நம் மக்களிடம் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகமாக ஆகி இருப்பது மிகவும் ஆரோக்கியமான செய்தி.
சிறுதானியங்களில் ராகி என்று அழைக்கப்படும் கேப்பை அல்லது கேழ்வரகு, தேவ உணவாக கருதப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் கிங் ஆப் மில்லட்ஸ் என்று கூறுவார்கள். கேழ்வரகில் கால்சியமும் இரும்புச் சத்தும் நிறைந்துள்ளது. சைவ உணவில் அதிகப்படியான கால்சியம் இதில் தான் உள்ளது. பாலை விட மூன்று மடங்கு கால்சியம் கொண்டது.
கேழ்வரகில் இருக்கும் மிதியோனை என்னும் அமினோ அமிலம் முதுமையை தடுக்கிறது. இது லெசித்தினுடன் இணைந்து, அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது. அது மட்டும் இன்றி, உடலை ரிலாக்ஸ் செய்து, டென்ஷன் மைக்ரேன் என்ற ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை போன்ற தீர்வாக அமைகிறது. கேழ்வரகில் உள்ள நாசத்துக்கள் மலச்சிக்கலை தடுக்கின்றன. சர்க்கரை நோயாளிகளுக்கு கேழ்வரகு ஒரு வரப்பிரசாதம் எனலாம்.
ராகி என்னும் கேழ்வரகு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இதில் பாலிஃபினோல்ஸ் (Polyphenols) மற்றும் ஃபைபர் (Fiber) அதிகம். நிரிழிவு நோய் உள்ளவர்கள் கேழ்வரகு தினமும் உண்டால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். பொட்டாசியம் (Potassium), பாஸ்பரஸ் (Phosphorus), இரும்பு (Iron) போன்ற மினரல் சத்துகள் அதிகமாக நிறைந்துள்ளது. இதனால் ஹீமோகுளோபின் (Hemoglobin) சுரத்தல் அதிகமாகும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
மேலும் படிக்க | மன அழுத்தத்தை போக்கும் ‘செரடோனின்’ ஹார்மோனை அதிகரிக்க செய்யும் சில உணவுகள்!
ராகி எலும்புகளுக்கு உறுதி அளிக்கும். இதில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் நம் உடலில் உள்ள எலும்புகளை ஸ்ட்ராங் ஆக வைக்கும். இதனால் மூட்டு வலி, முட்டி வலி, எலும்பு முறிவு போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கலாம். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தாராளமாக கேழ்வரகை எடுத்துக் கொள்ளலாம்.
கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் என் அனைத்தும் சரிவிகிதத்தில் உள்ளன. குழந்தைகளுக்கு கேழ்வரகை போல் சத்தான சுவையான ஊட்டச்சத்து வேறு எதிலும் கிடைக்காது. வளரும் குழந்தைகளைப் போலவே மாதவிடாய் கால மகள் இருக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் இது ஊட்டச்சத்துக்களை அள்ளிக் கொடுக்கிறது.
மேலும் படிக்க | Health Alert: உடல் எடையை குறைக்க உப்பைக் குறைத்தால் வரும் பிரச்சனைகள் இவை
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | எந்த கலர் திராட்சை கொலஸ்டாராலை கட்டுப்படுத்தும்? திராட்சைப்பழ ரகசியம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ