Health News: உடல்நலம் காக்க பல நன்மைகளை அள்ளித்தரும் கேழ்வரகு
உடல்நலம், உடல் பருமன் ஆகியவற்றில் அதிக கவனமாக இருக்கும் மக்கள், கோதுமை மாவுக்கு பதிலாக பார்லி மாவு, தினை மாவு, சோயா மாவு ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றன.
இந்நாட்களில் எடை இழப்புக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். உடல்நலம், உடல் பருமன் ஆகியவற்றில் அதிக கவனமாக இருக்கும் மக்கள், கோதுமை மாவுக்கு பதிலாக பார்லி மாவு, தினை மாவு, சோயா மாவு ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றன. குறிப்பாக இந்நாட்களில் கேழ்வரகு அதாவது ராகி அனைவராலும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. ராகி இந்தியாவின் பல இடங்களில் நாச்னி என்றும் அழைக்கப்படுகிறது.
கேழ்வரகில் பலவித ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன
கேழ்வரகின் முக்கிய அம்சம் என்னவென்றால், ராகியில் கொழுப்பு (Fat) மற்றும் சோடியம் சிறிதளவும் இல்லை. இது தவிர, இதில், நார்ச்சத்து, கால்சியம், புரதம், பொட்டாசியம், இரும்புச்சத்து ஆகியவையும் நிறைந்துள்ளன. இதில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து காரணமாக, எடை இழப்புக்கு இது சிறந்ததாக கருதப்படுகிறது. இது மட்டுமல்லாமல், ராகியில் இன்னும் பல நன்மைகள் உள்ளன.
நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது
ராகியில் கோதுமை மாவு அல்லது அரிசி மாவை விட பாலிபினால்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது, மற்றும், இதன் கிளைசெமிக் குறியீடும் குறைவாக உள்ளது. எனவே, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ராகியை காலை உணவிலோ (Healthy Food) அல்லது பகலில் மதிய உணவிலோ சேர்ப்பது நன்மை பயக்கும்.
இரத்த சோகைக்கு நல்ல தீர்வுயில் நன்மை பயக்கும்
ராகியில் இரும்புச் சத்து (Iron) அதிகமாக உள்ளது. ஆகையால், யாருக்காவது, இரத்த சோகை இருந்தாலோ அல்லது ஹீமோகுளோபின் குறைபாடு இருந்தாலோ, அவர்களுக்கு ராகி நல்ல பயன் அளிக்கும்.
புரதத்தின் சிறந்த ஆதாரம்
கேழ்வரகில் அமினோ அமிலம் மற்றும் உடலுக்குத் தேவையான புரதங்கள் நிறைந்துள்ளன. சைவ உணவை மட்டும் உட்கொள்ளும் மக்களின் உணவில் பெரும்பாலும் புரத மூலங்கள் குறைவாக இருக்கின்றன. புரதத்தின் குறைபாட்டை பூர்த்தி செய்ய அவர்கள் ராகியை உட்கொள்ளலாம்.
ALSO READ: வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகுமா; இல்லை அழவும் வேண்டும்
மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும்
ராகியில் ஏராளமான ஆண்டிஆக்சிடெண்டுகள் உள்ளன. அவை மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. கவலை, மனச்சோர்வு அல்லது தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள், ராகியை உட்கொண்டால் நல்ல மாற்றத்தை உணரலாம். ராகியால் அந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
கேழ்வரகால் ஏற்படும் பாதிப்புகள்
- சிறுநீரகத்தில் கல் அல்லது சிறுநீரகம் தொடர்பான ஏதேனும் சிக்கல் இருந்தால், அத்தகைய நபர்கள் ராகியை உட்கொள்ளக்கூடாது,. ராகியில் அதிக அளவு கால்சியம் உள்ளதால் அதை தவிர்ப்பது நல்லது.
-தைராய்டு நோயாளிகளும் ராகியை உட்கொள்ளக்கூடாது. ராகியால் தைராய்டு பிரச்சனை அதிகரிக்கக்கூடும்.
- அதிக அளவில் ராகியை உட்கொண்டாலும் பிரச்சனை ஏற்படலாம். அதிகமாக ராகி உட்கொள்வதால், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வயிற்றில் வாயு, உப்பசம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
(குறிப்பு: எந்தவொரு தீர்வையும் எடுப்பதற்கு முன்பு எப்போதும் ஒரு நிபுணர் அல்லது மருத்துவரை அணுகவும். இந்த தகவலுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.)
ALSO READ: Health News: ஏராளமாய் நன்மைகளை அள்ளித் தரும் ஏலக்காயை பயன்படுத்தி பயன் பெறுவோம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR