Sugarcane Juice: ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அற்புதம் கரும்புச்சாறு
பழரசங்களையும் உட்கொள்வதால், உடலுக்கு நன்மை கிடைக்கும். கரும்புச்சாறு நம் உடலுக்கு பலவித நன்மைகளை அளிக்கின்றது.
பழரசங்களையும் உட்கொள்வதால், உடலுக்கு நன்மை கிடைக்கும். கரும்புச்சாறு நம் உடலுக்கு பலவித நன்மைகளை அளிக்கின்றது. இது உடலுக்கு குளிர்ச்சியை அளிப்பது மட்டுமல்லாமல், குடிக்க சுவையாகவும் இருக்கிறது. உடலில் உஷ்ணத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்தும் வெயில் காலத்தில் கரும்புச்சாறு அமிர்தத்தைப் போல நிவாரணம் அளிக்கின்றது என்று கூறினால் அது மிகையாகாது.
செரிமானத்திற்கு நல்லது
கரும்புச்சாறு செரிமானத்திற்கும் (Digestion) மிகவும் நல்லதாகக் கருதப்படுகின்றது. இந்த சாற்றில் இயற்கை பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது வயிற்றை லேசாக வைத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள் கரும்புச்சாற்றையும் எடுத்துக் கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
கரும்புச்சாறு வயிற்றுக்கு நல்லது
கரும்புச்சாறில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை வயிற்றுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது வயிற்றுக்கு இதமான குளிர்ச்சியையும் மென்மையையும் அளிக்கிறது.
ALSO READ:சாப்பிட்ட பிறகு நடப்பது செரிமானத்திற்கு உதவுமா; உண்மை என்ன..!!
பம்பர் ஆற்றலை அளிக்கிறது
கரும்புகளில் (Sugarcane) இயற்கையாகவே சுக்ரோஸ் நிறைந்துள்ளது. இது உடலில் ஆற்றலை நிரப்புகிறது. பெரும்பாலும், சூடு அதிகமாக இருக்கும் நாளில், வெப்பநிலை அதிகமாக இருப்பதன் காரணமாக, வியர்வை வெகுவாக வெளியேறி அது நீரிழப்பை உண்டாக்குகிறது. இந்த நேரத்தில், கரும்புச்சாற்றை உட்கொள்வது உங்களுக்கு அதிகப்படியான ஆற்றலை அளிப்பதோடு, உடலுக்குத் தேவையான உற்சாகத்தையும் சக்தியையும் தருகிறது.
சிறுநீர் எரிச்சல் சரியாகும்
சிறுநீர் கழிக்கும்போது சிலருக்கு எரிச்சலும் வலியும் ஏற்படுவதுண்டு. கரும்புச்சாறு இந்த பிரச்சனைகளை தீர்க்க உதவும். மேலும், சிறுநீரக கல் (Kidney stones) உள்ளவர்களுக்கும் கரும்புச்சாறு நல்ல பயன்களை அளிக்கும்.
ALSO READ:Dark circles: கண்ணின் கருவளையங்கள் குறித்து அதிகம் தெரியாத ‘5’ தகவல்கள்..!!
குறிப்பு: இந்த கட்டுரை பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. எதையும் உட்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவர்கள் அல்லது நிபுணர்களை அணுக அறிவுறுத்தப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR