இந்தியாவில், பலருக்கு தூங்க செல்வதற்கு முன் வாக்கிங் செல்லும் பழக்கம் உள்ளது. பலர் மதிய உணவுக்குப் பிறகும் சிறிது வாக்கிங் செல்ல வேண்டும் என விரும்புகிறார்கள். செரிமானத்தை மேம்படுத்த வேண்டும் என்ர குறிக்கோளுடன் சபபிட்ட பின் வாக்கிங் செல்ல விரும்புகின்றனர்.
நீங்கள் உண்ட பிறகு, உங்கள் உடல் வேலை செய்யத் தொடங்குகிறது. செரிமானத்தின் போது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சபபடுகிறது. செரிமான இயக்கத்தின் குறிப்பிடத்தக்க பகுதி சிறுகுடலில் நடைபெறுகிறது. உணவுக்குப் பிறகு நடப்பது வயிற்றில் இருந்து சிறுகுடலுக்கு விரைவாக உணவுப் பரிமாற்றத்திற்கு உதவும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
உங்கள் வயிற்றில் இருந்து சிறுகுடலுக்கு உணவு எவ்வளவு வேகமாக செல்கிறதோ, அந்த வயிற்றில் ஏற்படும் உப்புசம்,, வாயு மற்றும் அமில தன்மை போன்ற பாதிப்புகளுக்கான வாய்ப்பு பெரிதளவு குறையும். உணவுக்குப் பின் 30 நிமிட நடை, வழக்கமான உடற்பயிற்சியுடன் சேர்ந்து, குடல் செயல்பாட்டை மேம்படுத்தி, மலச்சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும் என்பதையும் சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன.
ALSO READ | Health Alert! சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்..!!
உணவுக்குப் பிந்தைய வாக்கிங் செரிமானத்தை எளிதாக்குவது மட்டுமல்லாமல், வகை-2 நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நியூசிலாந்தின் ஒடாகோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியில், டைப்-2 நீரிழிவு நோயாளிகள், உணவுக்குப் பிறகு நடப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை பெருமளவு குறைகிறது என தெரியவந்துள்ளது
உடல் உணவை குளுக்கோஸாக மாற்றுகிறது, இது உடலுக்கு ஆற்றலின் முக்கிய ஆதாரமாகும். சாப்பிட்ட பிறகு, இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. அதிகரிக்கும் இந்த சர்க்கரையின் அளவை குறைக்க, உடல் இன்சுலினை சுரக்கிறது, இது குளுக்கோஸை செல்களுக்குள் செலுத்த உதவுகிறது. இருப்பினும், நீரிழிவு நோயாளிகளுக்கு, இன்சுலின் செயல்பாடு பலவீனமகா உள்ளதால், இரத்த சர்க்கரை அளவை கட்டுபடுத்த முடியாமல் உள்ளது. இதனால் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்க வழிவகுக்கும். உணவுக்குப் பிந்தைய வாக்கிங் காரணமாக, குளுக்கோஸ் உடல் செயல்பாட்டிற்கான ஆற்றலாக பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவைக் குறைக்க உதவுகிறது.
ALSO READ | Health Alert! அளவுக்கு மிஞ்சிய சீரகம் பெரும் கேடு விளைவிக்கும்..!!
சாப்பிட்ட உடனேயே நடப்பது அமிலத்தன்மை மற்றும் வயிற்றில் கோளாறுகளை ஏற்படுத்தும். "உங்கள் மதிய உணவு அல்லது இரவு உணவிற்குப் பிறகு 30-45 நிமிட இடைவெளிக்குப் பிறகு நடப்பது மிகவும் சிறந்தது" என்று சிங் கூறுகிறார். உங்கள் உணவுக்குப் பிறகு மிதமான வேகத்தில் நடக்க பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் வேகமாக நடப்பது, செரிமானத்தை பாதித்து, அஜீரணத்திற்கு வழிவகுக்கும்.
ஆரோக்கிய நன்மைகளுடன், உணவுக்குப் பிந்தைய வாக்கிங் ஒரு நாளைக்கு 10,000 காலடிகள் என்ற அளவினை எட்டவும் உதவும். இத அளவி உடல் பயிற்சி அதிக செய்ய விரும்புவர்கள் நிர்ணயிக்கும் இலக்கு என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த ஆரோக்கியத்திற்காகவும் பிட்னஸிற்காகவும் சிறிய வாழ்க்கை முறை மாற்றத்தைச் செய்ய வேண்டிய நேரம் இது.
ALSO READ | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ‘5’ உணவுகள்..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR