Dark circles: கண்ணின் கருவளையங்கள் குறித்து அதிகம் தெரியாத ‘5’ தகவல்கள்..!!

கருவளையம் தோலில் ஏற்படும் அதிகமான 'பிக்மெண்டேஷன்' காரணமாக ஏற்படுகிறது.  இதனால் கண்ணுக்குக் கெடுதலோ தொந்தரவோ இல்லை என்றாலும், அது முக அழகை பாதிப்பதோடு, வயதான தோற்றத்தையும்  தருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 6, 2021, 12:25 PM IST
Dark circles: கண்ணின் கருவளையங்கள் குறித்து அதிகம் தெரியாத ‘5’ தகவல்கள்..!! title=

கருவளையம் தோலில் ஏற்படும் அதிகமான 'பிக்மெண்டேஷன்' காரணமாக ஏற்படுகிறது.  இதனால் கண்ணுக்குக் கெடுதலோ தொந்தரவோ இல்லை என்றாலும், அது முக அழகை பாதிப்பதோடு, வயதான தோற்றத்தையும்  தருகிறது.

மற்ற அழகுப் பிரச்னைகளைப் போலவேம் கண்ணின் கீழ் கருவளையம் தோன்ற பல காரணங்கள் உள்ளது. இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, கால்சியம் போன்ற சத்துக்கள் குறைபாடு ஒரு காரணம் என்றாலும், வொர்க் பரம் ஹோம், ஆன் லைன் வகுப்புகள் காரணமாக, லேப்டாப்  அல்லது கணிணியில் அதிக நேரம் செலவிடுவதும் ஒரு காரணம்.  இது தவிர தூக்கமின்மை, மன அழுத்தம் என பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்

தோல் மருத்துவரான டாக்டர் மாதுரி,  கருவளையம் பற்றிய முக்கியமான தகவல்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவரது தனது பதிவில்“உங்கள் உண்மை வயதை விட முதுமையான தோற்றம் உள்ளதா? உங்களுக்கு தூக்கமில்லாத இரவுகள் உள்ளதா? உங்கள் கண்கள் உங்களை பிரதிபலிக்கின்றன என்பதி உங்களுக்குத் தெரியுமா?” என்ற கேள்வியை கேட்டதுடன், 
கண்ணின் கருவளையங்களை  பற்றி அனைவரும் அறிந்திராத முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ALSO READ | Anti Aging Water: முகத்தின் முதுமை ரேகைகளை விரட்டும் ‘மேஜிக்’ நீர்..!!!

பட்டுப்போன்ற கண்கள்

உங்கள் கண் பகுதி பட்டு போன்றது, உங்கள் முகம் பருத்தி போன்றது மற்றும் உங்கள் உடல் டெனிம் போன்றது. மூன்று ஆடைகளையும் ஒரே மாதிரி துவைக்கக் கூடாது என்பதை போல் கண்கள், முகம் மற்றும்  உடல் சருமத்தை வெவ்வேறு விதமாக கையாள வேண்டும் என அவர் கூறுகிறார். 

ஒவ்வாமை 
ஒவ்வாமை கருவளையங்களை ஏற்படுத்தும்; இவை சில நேரங்களில் ஒவ்வாமை ஷைனர்கள் என்று அழைக்கப்படுகின்றன. கருவளையங்கள், சில சமயங்களில் சிறுநீரகம்/அட்ரீனல் சமநிலையின்மை, அதிக மனஅழுத்தம்  மற்றும் தூக்கமின்மை  ஆகியவற்றின் அறிகுறிகளாக இருக்கலாம்

புகைபிடித்தல் மற்றும் ஆல்கஹால்
மது அருந்துவதால் கண்களுக்குக் கீழே இரத்த நாளங்கள் விரிவடைந்து, கருவளையங்கள் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது. ஆல்கஹால்  தூக்கத்தை பாதிக்கிறது. புகைபிடித்தலும், முதுமையான தோற்றத்தை ஏற்படுத்துகிறது. குறைந்த கொலாஜன் உற்பத்தியும் கண்களுக்குக் கீழே கரு வளையங்கள் ஏற்பட வழிவகுக்கும்

ALSO READ | வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடும் வழக்கம் உள்ளதா; இந்த செய்தி உங்களுக்குத் தான்..!!

மிலியா

மிலியா என்பவை உங்கள் கண்களைச் சுற்றியுள்ள சிறிய வெள்ளை புள்ளிகள் அல்லது சிறிய கட்டிகள். வளர்ச்சியடையாத அல்லது முதிர்ச்சியடையாத செபாசியஸ் சுரப்பிகள் காரணமாக இவை உருவாகின்றன என்று நம்பப்படுகிறது. கெரட்டின் நிறைந்துள்ள சிறிய  நீர்க்கட்டிகளான இவை பால் கட்டிகள் எனவும் அழைக்கப்படும். இவை சிசுக்களிடம் பொதுவாக காணப்படுகின்றன. இந்த சிறிய நீர்க்கட்டிகள் சருமத்தின் கீழ் சிக்கிக் கொள்கின்றன. இவற்றை நீக்க சிகிச்சை அளிக்க வேண்டும்

அடிக்கடி கண்களை தேய்க்க கூடாது

உங்கள் கண்களை அடிக்கடி தேய்க்கும் பழக்கம் இருந்தால் பெரியோர்பிட்டல் மெலனோசிஸ் அல்லது கருவளையங்கள் ஏற்படும். கண்களைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையானது. கண்களைத் தொடர்ந்து தேய்ப்பது அதனை மிகவும் பாதிக்கும். இதனால், கண்ணுக்குக் கீழே உள்ள நுண்ணிய இரத்த நாளங்களை உடைந்து, ஹீமோசைடிரின் படிவை ஏற்படுத்துகிறது, இதனால் கருவளையம் ஏற்படுகிறது. இந்த பழக்கத்தை தவிர்ப்பது முக்கியம்.

ALSO READ | பகீர் தகவல்! காற்று மாசுபாடு விந்தணு எண்ணிக்கையை குறைக்கிறதா..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News