அதீத முடி வளர்ச்சி மற்றும் முடி உதிர்வை கட்டுப்படுத்தும் மேஜிக் ஜூஸ்
Hair Care Tips: கூந்தல் வளர்ச்சியை தூண்டுவதில் நெல்லிக்காய் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. நெல்லிக்காயில் உள்ள விட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்கள் போன்ற பண்புகள் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
நெல்லிக்காய் சாற்றை எவ்வாறு பயன்படுத்துவது: நெல்லிக்காய் ஒரு ஆயுர்வேத மூலிகையாகும், இதில் வைட்டமின்-இ, வைட்டமின்-சி மற்றும் டானின் எனப்படும் பண்புகள் உள்ளன. பழங்காலத்திலிருந்தே நெல்லிக்காய் பல நோய்களுக்கும், முடி பராமரிப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்று உங்கள் தலைமுடிக்கு நெல்லிக்காய் ஜூஸ் கொண்டு வந்துள்ளோம். நெல்லிக்காயில் உங்கள் முடியை வலுப்படுத்தும் பல பண்புகள் உள்ளன, இதன் காரணமாக நீங்கள் முடி உதிர்தலில் இருந்து விடுபடுவீர்கள். இது தவிர, நெல்லிக்காய் சாற்றை முடிக்கு தடவுவது உங்கள் முடியின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது. இது மட்டுமின்றி, உங்கள் உச்சந்தலையில் உள்ள மெலனின் அளவை அதிகரிக்க நெல்லிக்காய் உதவுகிறது, இதனால் நீங்கள் வெள்ளை முடி பிரச்சனையை தவிர்க்கலாம், எனவே நெல்லிக்காய் சாற்றை முடியில் எவ்வாறு தடவுவது என்று பார்ப்போம்.
கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் நெல்லிக்காய் ஜூஸ்
நெல்லிக்காய் ஜூஸ் நம் கூந்தலுக்கு பயன்படும் சக்தி வாய்ந்த மூலிகையாகும். இது நீளமான வளமான அடர்த்தியான கூந்தலை கொடுக்கிறது. இது கூந்தலுக்கான சூப்பர் புட் மூலிகையாகும். இது ஆக்ஸினேற்ற அழுத்தங்களால் செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து மயிர்க்கால்களுக்கு நல்ல போஷாக்கை தருகிறது. இது முடி உதிர்தல், பொடுகு மற்றும் முன்கூட்டிய நரைத்தல் போன்ற அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும்.
மேலும் படிக்க | எலுமிச்சை ஜூஸ் ரொம்ப நல்லது...ஆனா அதிகமானா ரொம்ப ஆபத்து: ஜாக்கிரதை!!
நெல்லிக்காய் சாற்றை முடியில் தடவுவது எப்படி?
* நெல்லிக்காய் சாற்றை தலைமுடிக்கு தடவ முதலில் நெல்லிக்காய் சாற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
* அதன் பிறகு, அதை உங்கள் உச்சந்தலையில் நன்கு தடவவும்.
* பின்னர் சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் வரை முடியை நன்றாக மசாஜ் செய்யவும்.
* இதற்குப் பிறகு, தலைமுடியில் சுமார் 30 முதல் 45 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.
* பிறகு லேசான ஷாம்பு மூலம் தலைமுடியைக் கழுவி சுத்தம் செய்யுங்கள்.
* இந்த செயல்முறையை வாரத்திற்கு 2 முதல் 3 முறை இதை முயற்சிக்கவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | பெண்கள் இரவில் 'அதை' அணிந்துகொண்டு தூங்குவது சரியா? தவறா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ