Anti Inflammatory Diet: அழற்சி (Inflammation) என்பது உயிரணுக்களின் செயல்பாட்டினால் உடலில் ஏற்படும் எதிர்பாற்றலையும்,  காயங்கள், தீப்புண்கள், அடிபட்ட இடங்களில்  ஏற்படும் திசுக்களின் சேதத்தையும் குறிக்கிறது. மேலும் இதர உயிரணுக்களின் வினையால் உடம்பில் நிகழும் எதிர்ப்பாற்றல் சார்ந்த செயலாகும். இதனால் பாதிக்கப்பட்ட பகுதியில் வீக்கம் ஏற்படுகிறது. மூட்டு அழற்சி, குடல் அழற்சி, கல்லீரல் அழற்சி உள்ளிட்ட பல வகையான அழற்சி சார்ந்த பிரச்சனைகளை வாழ்க்கைமுறை மாற்றங்கள், உணவுமுறை மாற்றங்கள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் மூலம் தீர்க்கலாம். அழற்சியினால் ஏற்படும் வீக்கத்தை போக்குவதால்  ஆரோக்கியமான வாழ்க்கை வழலாம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டயட் மூலம் உடல் வீக்கத்திற்கு தீர்வு காணுதல்


உடல் வலிமையை அதிகரித்து, பலவீனத்தை போக்கும் சில உணவுகளை டட்யட்டில் சேர்ப்பது, உடலில் ஏற்படும் அழற்சி வீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழி. சருமம் சிவந்து போதல், வீக்கம், வலி ​​ஆகியவை அழற்சியின் அறிகுறிகளாகும், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம், பலவீனமடைந்தல், காயம், அல்லது தொற்றுநோய் பாதிப்பை உணர்த்தும் இயற்கையான உயிரியல் எதிர்வினையாகும். ஆயுர்வேத மற்றும் குடல் ஆரோக்கிய பயிற்சியாளரான டாக்டர் டிம்பிள் ஜங்தா, வீக்கத்தைக் குறைக்க, உதவும் சிறந்த ஐந்து மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை பற்றி (Health Tips) கூறியுள்ளார். இது குறித்து விபரமாக அறிந்து கொள்ளலாம்.


இஞ்சி


இஞ்சியில் 'ஜிஞ்சரால்' உள்ளதால்,  உடல் வீக்கத்தை போக்க சிறந்த உணவாக கருதப்படுகிறது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டிஸ்பாஸ்மோடிக் பண்புகளைக் கொண்டுள்ளது. இது உடலில் ஏற்படும் வலியைக் குறைக்கவும் உதவும்.


அஸ்வகந்தா


அஸ்வகந்தா ஆயிர்வேதத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான மூலிகை. இதில் 'அடாப்டோஜெனிக் பண்புகள்' மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் உடலில்  ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை போக்கும். மேலும், இது மன அழுத்தத்தை போக்கும் மருந்தாகவும் உள்ளது.  தூக்கமின்மை பிரச்சனையை தீர்க்கும் ஆற்றலும் கொண்டது.


மேலும் படிக்க | நரம்பு மண்டலத்தை பாதிக்கும் வைட்டமின் B12 குறைபாடு... அறிகுறிகளும்... உணவுகளும்..!!


துளசி 


துளசி சிறந்த மூலிகை மட்டுமல்லாது. இந்து மதத்தில் தெய்வமாக போற்றப்பட்டுகிறது.  எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட துளசி, அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.  சுற்றூ சூழலை தூய்மைபடுத்தும் திறனும் துளசிக்கு உண்டு


மஞ்சள்


மஞ்சளில் 'குர்குமின்' உள்ள நிலையில் உடலில்  அழற்சி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவும். ஏனெனில் குர்குமின் ஒரு சிறந்த அழற்சி எதிர்ப்புப் பொருளாகும். புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டதாக பல ஆய்வுகளில் நிரூபிக்கப்படுள்ளது


கிரீன் டீ


பாலிபினால்கள் நிறைந்துள்ள க்ரீன் டீயை தினமும் உட்கொள்ளுவதால், அழற்சி தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.  ஒரு கப் கொதிக்கும் தண்ணீரில் மூன்று நிமிடங்கள் கீரீன் டீயை போட்டு தினமும் ஒரு முறை குடித்தால் போதும். கிரீன்ன் டீயின் நன்மைகளை முழுமையாக பெற அவற்றை கொதிக்க வைக்க கூடாது என்பதை நினைவில் கொள்ளவும்.


பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | கொழுப்பு கல்லீரல் ஏற்படாமல் இருக்க... செய்ய வேண்டியதும்.. செய்யக் கூடாததும்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ