இந்த அஞ்சுல ஏதாச்சும் ஒண்ணு இருந்தாலும் ஹார்ட் அட்டாக் தான்! மாரடைப்பை அலட்சியப்படுத்தாதீங்க!
Heart Health Alert : மாரடைப்பு மிகவும் ஆபத்தானதாக மாறி இருப்பதுடன் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் வரும் பிரச்சனையாகிவிட்ட நிலையில் விழிப்புணர்வு மட்டுமே சிக்கலைத் தணிக்க உதவும். மாரடைப்பு தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய சில அறிகுறிகள்...
மாரடைப்பு பிரச்சனை தற்போது ஆபத்தான வேகத்தில் அதிகரித்து வருவது கவலைகளை அதிகரிக்கிறது. அதிலும், இளம் வயதினர், முறையாக உடற்பயிற்சி செய்து வாழ்க்கைமுறையை சீராக வைத்திருப்பவர்கள் என பலதரப்பு மக்களையும் பாதிக்கிறது. தற்போது நெஞ்சுவலி, மாரடைப்பு என்பது வயதானவர்களின் நோய் என்று சொல்லிவிட முடியாது. மாரடைப்பு மிகவும் ஆபத்தானதாக மாறி இருப்பதுடன் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் வரும் பிரச்சனையாகிவிட்ட நிலையில் விழிப்புணர்வு மட்டுமே சிக்கலைத் தணிக்க உதவும். மாரடைப்பு தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய சில அறிகுறிகளைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம்.
மாரடைப்பு
கடுமையான மார்பு வலி தான் மாரடைப்பின் முதன்மை அறிகுறியாக கூறப்படுகிறது. ஆனால், பொதுவான அறிகுறியாக இருந்தாலும், மாரடைப்பைக் குறிக்கும் பிற அறிகுறிகளையும் தெரிந்துக் கொள்ள வேண்டும். மார்பு வலி ஒரு முக்கிய எச்சரிக்கை அறிகுறி என்றாலும், மார்பு வலித்தாலே அது மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்காது. அதேபோல, மார்புவலி இல்லாமல் வேறு சில அறிகுறிகளும் மாரடைப்புக்கு காரணமாகலாம்.
எனவே மாரடைப்பு தொடர்பான மற்ற அறிகுறிகளையும் தெரிந்துகொள்வது என்பது சரியான நேரத்தில் சிகிச்சை அளித்து உயிர்காக்க உதவும்.
மாரடைப்பு அறிகுறிகள்
மூச்சுத் திணறல்
மூச்சுத் திணறல் என்பது மாரடைப்பின் ஒரு அறிகுறியாக இருக்கலாம். சில சமயத்தில் மார்பில் வித்தியாசமான உணர்வுடன் மூச்சுத் திணறல் இருந்தால் அது மாரடைப்புக்கான காரணமாகவும் இர்க்கலாம். ஆனால், சில சமயங்களில் வேகமாக இயங்குவதாலும் (வேகநடை, ஓடுவது, குதிப்பது, நடனமாடுவது) உடல் செயல்பாடு அல்லது ஓய்வு நேரத்தில் கூட மூச்சுத் திணறல் ஏற்படலாம். மூச்சுத்திணறல் என்பதை மாரடைப்புக்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ளவும் முடியாது விட்டுவிடவும் முடியாது.
ஏனென்றால், சுவாச பிரச்சனை இருந்தாலு, மூச்சுத்திணறல் இருக்கலாம். ஆனால், திடீரென்று அல்லது விவரிக்க முடியாத மூச்சுத் திணறலை அனுபவித்தால், அதிலும் குறிப்பாக மாரடைப்புக்கான மற்ற அறிகுறிகளுடன் சேர்ந்து மூச்சுத்திணறல் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசிக்கவும்.
காரணமே இல்லாமல் வியர்வை: அடிக்கடி உடல் வியர்த்துக் கொட்டுவது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். உடல் செயல்பாடுகளில் ஈடுபடாத போதும், வியர்த்துக் கொட்டினால் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது. பொதுவாக கவலை அல்லது மன உளைச்சலில் இருந்தாலும் உடலில் அதிக வியர்வை சுரக்கலாம், ஆனால் காரணமே இல்லாமல் அடிக்கடி வியர்த்துக் கொட்டினால் கவனம் தேவை.
மேலும் படிக்க | தினமும் ஒரு கைப்பிடு பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
குமட்டல் அல்லது செரிமான பிரச்சனை : மாரடைப்புக்கு முன் குமட்டல், அஜீரணம் அல்லது வயிற்று வலி போன்ற உணர்வுகள் ஏற்படலாம். பொதுவாக, உணவு ஒவ்வாமை அல்லது இரைப்பை குடல் அசௌகரியம் போன்றவற்றாலும் இருக்கலாம். ஆனால், மூச்சுத்திணறல், அடிக்கடி வியர்வை வரும்போது குமட்டல் அல்லது அஜீரணப் பிரச்சனை இருந்தால் அது மாரடைப்புக்கான எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.
உடல் வலி
கைகள், முதுகு, கழுத்து, தாடை அல்லது வயிறு உள்ளிட்ட பிற பகுதிகளில் அசௌகரியம் மற்றும் இந்த பகுதிகளில் \விவரிக்க முடியாத அசௌகரியத்தை உணர்ந்தாலும், அதிலும் இவை குறிப்பாக திடீரென்று வந்தாலும் அலட்சியப்படுத்த வேண்டாம்.
சோர்வு & சோம்பல் :
உடலில் காரணமே இல்லாமல் அல்லது அசாதாரணமாக சோர்வு ஏற்படுவது என்பது மாரடைப்புக்கு முந்தைய மற்றொரு அறிகுறியாகவும் இருக்கலாம். மாரடைப்பு வருவதற்கு பல நாட்கள் அல்லது சில வாரங்கள் கூட உடலில் சோர்வு நீடிக்கலாம் என்று சொல்கின்றனர். எனவே, சோர்வாக உணர்ந்தால் கவனம் அவசியம். அதிலும், மாரடைப்புக்கான பிற அறிகுறிகளுடன் உடல் சோர்வும் சேர்ந்துக் கொண்டால் சுகாதார நிபுணரை அணுகி ஆலோசனை பெறவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | எச்சரிக்கை! முள்ளங்கியுடன் சாப்பிடக் கூடாத சில உணவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ